சோதிக்கப்பட்ட விசுவாசம் நன்மைகளை உண்டாக்குகிறது TESTED FAITH PRODUCES GOODS 58-0518 ஞாயிற்றுக்கிழமை மாலை, மே 18, 1958 சிட்டி ஹால் பாங்கூர், மெய்ன், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 58-0518 - சோதிக்கப்பட்ட விசுவாசம் நன்மைகளை உண்டாக்குகிறது நாம் ஜெபத்திற்காக ஒரு கணம் எழுந்து நிற்போமா? நாம் அவருடைய புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பாக, அதன் ஆசிரியரை சந்திப்போமா? 2 தேவனே, எங்கள் இருதயங்களில் நன்றியறிதலோடு இன்றிரவு நாங்கள் மீண்டும் உம்முடைய பிரசன்னத்திற்குள் வருகிறோம். எங்கள் கண்கள் கண்டவைகளுக்காகவும், எங்கள் காதுகள் கேட்டவைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்: இயேசு சரீரப் பிரகாரமாக வருவதற்கு சற்று முன்பாக இருக்கும் இந்நாளில், மனுபுத்திரருக்குத் தம்மைத்தாமே வெளிப்படுத்துகின்ற பெரிய, வல்லமையுள்ள, ஜீவனுள்ள தேவனுக்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அவரைக் காணும் போது அவரை நேசிப்போம், கர்த்தரைச் சந்திக்கும்படி அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, என்றென்றைக்கும் அவருடனேகூட இருப்போம். சூரியன் மறையும் வரைக்கும் தினந்தோறும் ஜெபித்தும், வாஞ்சித்துக் கொண்டும், கிரியை செய்து கொண்டும் காத்திருக்கிற எங்கள் இருதயங்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதுவே. 3 ஆண்டவரே, இந்த ஓய்வுநாள் மாலையில் நாங்கள் இந்தக் கட்டிடத்தில் கூடியிருக்கையில், இன்றிரவு நீர் எங்களுக்கு ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைத் தரும்படி நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்; ஒவ்வொரு வரிசையிலும், ஒவ்வொரு இடைகழிலும் தங்கள் நிலைகளை எடுத்துக்கொள்ளும்படி பரலோகத்திலிருந்து தூதர்களை நீர் அனுப்புவீராக. அவர்கள் மக்களின் இருதயங்களுக்கு உம்முடைய வார்த் தையை ஊழியம் செய்வார்களாக. அவர்கள் கேட்கும்படிக்கு செவிகளை விருத்தசேதனம் பண்ணும், பேசப்போகின்ற உதடுகளை விருத்தசேதனம் பண்ணும், பிறகு ஆண்டவரே, நோக்கிப் பார்க்கப்போகின்ற கண்களை விருத்தசேதனம் பண்ணும். ஜீவனுள்ள தேவனு டைய மகத்தான வல்லமை இன்றிரவு எங்களுக்குள்ளே பாய்ந்து செல்லும்படிக்கு, எங்களுக்குச் சிறந்த விசுவாசத்தைத் தாரும். இக்கூட்டம் முடிவடையும்போது, சரீரப் பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாகவோ பலவீனப்பட்ட ஒருவர் கூட எங்கள் மத்தியில் இல்லாதிருப்பாராக. 4 ஆண்டவரே, இவைகளை எங்களுக்குத் தந்தருளும், ஏனென்றால் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், உம்மை ஆராதிக்கவும், உம்முடைய மக்கள் மத்தியில் உம்மைப் போற்றவும் விரும்புகிறோம். ஆண்டவரே, எங்களுக்கு ஒரே ஒரு நோக்கம் உண்டு, அது உமக்கு ஊழியம் செய்வதே; ஒரே ஒரு தூண்டுதல் உண்டு: நீர் நாங்கள் செய்யும்படி விரும்புகிற வழியிலேயே அதைச் செய்வதே. ஆகையால் இவைகளுக்காக உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களுக்குத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 5 அநேகர் நின்று கொண்டிருப்பதால், ஒருசில அறிவிப்புகளைச் செய்துவிட்டு, நேரடியாக ஆராதனைக்கு, அல்லது செய்திக்குக் கடந்து செல்லலாம். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு உங்களுக்காக ஒரு சுவிசேஷ செய்தியைக் கொடுக்க விரும்புகிறோம், அதன் தலைப்பு: 'வல்லமையுள்ள வெற்றியாளர்' (The Mighty Conqueror). கர்த்தருக்குச் சித்தமானால் செவ்வாய் இரவு: 'கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடும்போது' (When The Eagle Stirs Her Nest And Hovers Over Her Young) என்கிற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன். புதன் இரவு கூட்டத்தில் ஒரு பெரிய உச்சக்கட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம், இந்த வழியில் எப்படியாவது, ஏதோ ஒன்று மக்களுக்கு சம்பவித்து, அது அவர்கள் இருதயங்களை தேவனுக்காக அக்கினியாய் பற்றி எரியச் செய்யும் என்றும், நியூ இங்கிலாந்து (New England) பகுதியில் ஒரு பழங்காலத்து எழுப்புதல் வெடிக்கும் என்றும் ஜெபிக்கிறோம். 6 மேற்கு கடற்கரை பகுதியிலும், மத்திய கிழக்கு பகுதியிலும், தெற்கிலும் முயற்சி செய்யப்பட்டாயிற்று; நியூ இங்கிலாந்து பகுதிதான் முயற்சி செய்வதற்கான நம்முடைய கடைசி இடமாகத் தெரிகிறது. மத சுதந்திரத்திற்காகப் பிளைவுத் பாறையில் (Plymouth Rock) நம்முடைய முன்னோர்கள் தரையிறங்கிய இடம் இதுதான்; இன்று நாம் சேவிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிற இந்த மகத்தான ஆவிக்குரிய பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக, ஜெபிக்கிற ஆண்களும் பெண்களும் இந்தப் புனித மண்ணிலிருந்துதான் புறப்பட்டுச் சென்றார்கள். இந்த நாட்டில் தரையிறங்கிய தங்கள் முன்னோர்களைக் குறித்து எந்த அமெரிக்கரும் வெட்கப்பட முடியாது; அவர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஆலயத்திற்குச் சென்றார்கள், மத சுதந்திரத் திற்காக இங்கே வந்தார்கள், குதிரை சவாரி களிலும், மூடப்பட்ட பழைய வண்டிகளிலும் சென்றார்கள், ஆலயத்திற்குச் செல்வதற்காக செவ்விந்தியர்களோடு சண்டையிட்டார்கள்; அவர்களுடைய இரத்தம் இந்த மண்ணை நனைத்திருக்கிறது. அவர்கள் விசுவாசித்த அதே தேவனில் நாம் உண்மையாக விசுவாசம் வைத்து, அவர்கள் அவரை சேவித்த அதே பயபக்தியோடு நாமும் அவரை சேவிப் போமானால், நாம் மீண்டும் ஒரு எழுப்புதலைக் காண்போம், அது நியூ இங்கிலாந்திலிருந்து தொடங்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதைச் சுமந்து செல்ல நாம் ஆயத்த மாயிருந்தால், தேவன் அதைச் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். 7 ஒரு சந்தர்ப்பப் பொருளைக் கண்டுபிடிப்பதற்காக, இப்போது நாம் வேதவசனத்தைத் திருப்பி ஒரு சிறிய மையக்கருத்தை வாசிப்போம், மாற்கு 11-ம் அதிகாரம் 22-வது வசனம், ஒரே ஒரு வசனம் மட்டும். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 8 இன்றிரவு செய்தியின் மையக்கருத்தாக இதை எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன்: "தேவனில் விசுவாசமாயிருங்கள்." இதன் தலைப்பு என்னவென்றால்: சோதிக்கப்பட்ட விசுவாசம் நன்மைகளை உண்டாக் குகிறது (Tested Faith Produces Goods). 9 இப்போது நீங்கள் சொல்லலாம், "சகோதரன் பிரான்ஹாம், நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு, 'தேவனில் விசுவாசமாயிருங்கள்' என்கிற வெறும் மூன்று வார்த்தைகளை மையக்கருத்தாக வாசிப்பது, இந்த சபையின் அளவிற்கு மிகவும் சிறியதாகத் தெரியவில்லையா?" 10 இல்லை, அதுவே தாராளம், அதுவே போதுமானது. நாம் வாசித்ததை நாம் விசுவாசித்து, அதன்படியே செயல்படுவோ மானால், அது உலகம் முழுவதையும் மனந்திரும்புதலுக்குள் வழிநடத்தப் போது மானது; இன்றிரவு உலகம் முழுவதும் வியாதியாயிருக்கும் ஒவ்வொரு வியாதியஸ் தரையும் சுகமாக்க அது போதுமானது: "தேவனில் விசுவாசமாயிருங்கள்." மன்னிப்பை விரும்புகிற அனைவருக்கும் அது ஒரு மன்னிப்பாக இருக்கிறது; ஆனால் அது மன்னிப்பாக இருக்க வேண்டுமானால், அது மன்னிப்பாகவே பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். 11 சில காலத்திற்கு முன்பு, அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது இளம் அமெரிக்காவின் ஆரம்ப நாட்களில், ஒரு மனிதன் ஒரு இராணுவக் குற்றத்தைச் செய்ததாகவும், அவன் குற்றவாளியாகக் காணப்பட்டு, இத்தனை நாட்களுக்குள் துப்பாக்கி ஏந்திய படையால் சுடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜனாதிபதியை, அக்காலத்தில் ஆபிரகாம் லிங்கன் என்று நான் நினைக்கிறேன், அவரை நன்கு அறிந்த ஒரு நல்ல மனிதர், அவரிடம் சென்று, "திரு. லிங்கன் அவர்களே, ஒருவேளை அவன் தவறு செய்திருக்கலாம், ஆனால் அவனை விடுவிக்கவும் அல்லது கொல்லவும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது" என்று கூறி, அந்த அன்பு மனிதருடைய உயிருக்காக கெஞ்சினார். மேலும், "அவன் ஒரு சாதாரண மனிதன், நல்ல குடும்பத்தில் வளர்ந்தவன். அவனுக்கு ஏன் நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?" என்றார். 12 திரு. லிங்கன் அவர்கள், இரக்ககுணமும், தாராள மனப்பான்மையும் கொண்ட ஒரு கிறிஸ்தவ கனவானாக இருந்தபடியால், "நான் அதைச் செய்வேன்" என்று கூறினார். அவர் ஒரு சிறிய காகிதத் துண்டில், "இன்னாரை மன்னிக்கிறேன். ஆபிரகாம் லிங்கன்" என்று எழுதினார். 13 அந்த மனிதன் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கைதியிடம் ஓடிச்சென்று, "ஐயா, உனக்கான மன்னிப்பு இதோ என்னிடம் இருக்கிறது!" என்றான். அவன் அதை அவருக்கு முன்பாக வைத்தான். "ஓ," அந்த கைதி, "அது ஒரு மன்னிப்புப் பத்திரம் அல்ல, அது வெறும் ஒரு காகிதத் துண்டு" என்றான். ஆனால் அந்த மனிதர், "இது உன்னுடைய மன்னிப்புப் பத்திரம், இதில் திரு. லிங்கன் அவர்களின் பெயர் இருக்கிறது, அவர் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி" என்றார். அதற்கு அவன், "இது திரு. லிங்கன் அவர்களுடைய சரியான பத்திரமாக இருந்தால், அது பொன் முலாம் பூசப்பட்டதாகவும், முத்திரையிடப் பட்டதாகவும் இருக்கும்" என்றான். அவர், "ஆனால் ஐயா, இது ஜனாதிபதியின் கையெழுத்து!" என்றார். 14 அந்த நபர் தன் வாழ்க்கையை இன்னும் பரிதாபகரமாக்குவதாக நினைத்து, அவன் அதை ஏற்றுொள்ள மறுத்துவிட்டான். மறுநாள் காலையில் சூரிய உதயத்தில் அவன் சுடப்பட்டான். அந்த மனிதன் முந்தின நாளே மன்னிக்கப்பட்டான் என்று ஐக்கிய அமெரிக் காவின் ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட ஒரு அறிவிப்பு இருந்தும், அவன் சுடப்பட்டான். இப்போது என்ன? அது சோதிக்கப்பட்டது - நம் தேசத்தின் பெடரல் நீதிமன்றங்களில் சோதிக்கப்பட்டது, அவர்களின் தீர்ப்பு இதோ: "ஒரு மன்னிப்பு, மன்னிப்பாக ஏற்றுக் கொள்ளப் படாவிட்டால், அது மன்னிப்பு அல்ல." 15 தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அப்படித்தான் இருக்கிறது; அந்த வழியில் அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது இரட்சிப்பாக இருக்கிறது, அதை சுகமாக ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு அது சுகமாக இருக்கிறது. இது ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் மட்டுமே, ஆனால் அதன் அர்த்தம் என்ன? "தேவனில் விசுவாசமாயிருங்கள்" ("Have faith in God"). 16 கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லியில் நான் அறிந்த ஒரு சிறுவனைப் பற்றிய கதை என்னை எப்போதும் மிகவும் கவர்ந்த ஒன்றாகும். ஒருநாள் அவன் பழைய வீட்டில் பரண் மேல் ஏறி சில பழைய பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, அங்கே ஒரு பெட்டியில் அரை அங்குல சதுரமுள்ள ஒரு சிறிய தபால் தலையைக் (stamp) கண்டெடுத்தான்; அது மஞ்சள் நிறமாக மாறியிருந்தது, அந்த காகிதம் பார்க்க நன்றாக இல்லை. ஆனால் அந்தச் சிறுவன், "உனக்குத் தெரியுமா, எனக்கு ஐஸ்கிரீம் வாங்குவதற்கு இதில் ஒரு ஐந்து சென்ட் கிடைக்கும்" என்று நினைத்தான். 17 எனவே அவன் தெருவழியே ஒரு தபால்தலை சேகரிப்பவரிடம் சென்று, "ஐயா, இந்த தபால்தலைக்கு நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?" என்று கேட்டான். 18 அந்த சேகரிப்பாளர் பூதக்கண்ணாடியை அதன்மேல் வைத்துப் பார்த்து, "நான் உனக்கு ஒரு டாலர் நோட்டு தருகிறேன்" என்றார். 19 உடனடியாக வியாபாரம் முடிந்தது, அந்தச் சிறுவன் தன்னால் எவ்வளவு ஐஸ்கிரீம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட ஐஸ்கிரீம் கடைக்கு விரைந்து சென்றான். அந்தத் தபால்தலை சேகரிப்பாளர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தத் தபால்தலையை ஐநூறு டாலர்களுக்கு விற்றார்; சிறிது காலத்திற்குப் பிறகு அது ஐந்தாயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டது; கடைசியாக நான் கேள்விப்பட்டபோது, அந்தத் தபால்தலை கால் மில்லியன் டாலர் மதிப்புள்ளதாயிருந்தது. அது காகிதமோ, அதன் அளவோ முக்கியமல்ல, அந்த காகிதத்தில் என்ன இருக்கிறது என்பதே முக்கியம். 20 நான் வாசித்த வேதபகுதியின் அளவோ, அது எழுதப்பட்டிருக்கும் காகிதமோ முக்கியமல்ல, நான் வாசித்தது என்னவென்பதே முக்கியம், அது நித்திய தேவனுடைய வார்த்தை. வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தை எல்லா யுகங்களிலும் நித்திய நித்தியமாகவும் நிலைநிற்கும், அது ஒருபோதும் மாறாது, அது தேவனுடைய வார்த்தை; நமக்குத் தெரிந்த முழு பயபக்தியோடும் நாம் அதை அணுகுவோமாக. 21 இயேசு, "தேவனில் விசுவாசமா யிருங்கள்" என்று சொல்லுகிறார். எபிரேயர் 11-ம் அதிகாரம் சொல்லுகிறது: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நினை வில் வைத்துக்கொள்ளுங்கள், அது ஏதோ ஒரு அறிவார்ந்த கருத்துருவாக்கம் (intellectual conception) மட்டுமல்ல, அது ஒரு உறுதிப் பொருள் (substance), அது நீங்கள் உரிமையாக்கிக் கொண்டிருக்கும் ஒன்று. 22 (ஐயா, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள்). "கண்ணால் காண்பதே நம்புவது" (Seeing is believing) என்ற பழைய பழமொழியை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். மனித சரீரத்தைக் கட்டுப்படுத்தும் ஐந்து புலன்கள் உள்ளன: பார்த்தல், ருசித்தல், தொடுதல், முகர்தல், கேட்டல். அது சரியென்று நமக்குத் தெரியும். இப்போது, எல்லோரும் தாங்கள் பார்ப்பதின் மீது அதிக நம்பிக்கை வைக்கிறார்கள், ஆனால் அது முற்றிலும் சரியல்ல. 23 எனக்கு முன்பாக நிற்கிற ஒரு மனிதரை நான் பார்க்கிறேன், அவர் என்னைவிட உயரமானவர், என்னைவிடச் சற்றுப் பருமனானவர். அவர் கருமையான நிறத்தில் ஒரு கோட் அணிந்திருக்கிறார், அவருடைய டை-யில் சிறிய பூக்கள் உள்ளன. இது உண்மை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். 24 (எனக்குப் பின்னால் நில்லுங்கள். உங்கள் கைகளைத் தாருங்கள்). இப்போது நான் அந்த மனிதரைப் பார்க்கவில்லை, ஆனாலும் அவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் வாதிட விரும்புகிறீர்களா? [சபையார் சிரிக்கிறார்கள்] எனக்கு எப்படித் தெரியும்? அவரைப் பார்ப்பது எனக்குச் சாத்தியமற்றது. ஆனால் எனக்கு மற்றொரு புலன் இருக்கிறது, அது தொடு உணர்வு, நான் இப்போது அவரை உணருகிறேன்; என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் மேலே வரும்போது அவருடைய இடது கையில் ஒரு வட்டமான கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார், ஆகையால் இது அதே மனிதர்தான்; என்னுடைய பார்வை அவரை எவ்வளவாக உறுதிப்படுத்துமோ, அவ்வளவாக என்னுடைய தொடு உணர்வும் அவரை உறுதிப்படுத்துகிறது; அப்படியானால் காண்பது நம்புவதல்ல, இப்போது உணருவதே நம்புவது. (இப்போது ஒரு கணம் பின்னால் செல்லுங்கள்). இப்போது என்னால் அவரை உணர முடியவில்லை, ஆனால் காண்பது நம்புவது. இப்போது உணருவது நம்புவது. அந்த வித்தியாசத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? (நன்றி ஐயா). 25 (இசைக் கருவியில் பழக்கமான ஒன்றை வாசியுங்கள்). இசை வாசிக்கப்படுகிறது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்போது கைகளைக் கீழே போடுங்கள். (நன்றி). எத்தனை பேர் அதைப் பார்த்தீர்கள்? காண்பதுதான் நம்புவது என்று நான் நினைத்தேன். [சபையார் சிரிக்கிறார்கள்] இந்த முறை நான் அதைப் பார்க்கவும் இல்லை, உணரவும் இல்லை, ஆனாலும் எனக்குக் கேட்கும் புலன் இருக்கிறது, கேட்டல் அதைச் சொல்லுகிறது. 26 இப்போது, அந்தச் சட்டை வெள்ளை யாக இருக்கிறது. நிறக்குருடு இல்லாத இங்குள்ள அனைவருக்கும் அது வெள்ளை என்று தெரியும். விசுவாசம் என்பது என்ன? நம்பப்படுகிறவைகளின் உறுதி, நீங்கள் பார்க்காத, ருசிக்காத, தொடாத, முகராத அல்லது கேட்காதவைகளின் நிச்சயம். அது மற்றொரு புலன், அது விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது. சரீரத்தின் புலன்கள் ஐந்து, ஆத்துமா இரண்டை அறிவிக்கிறது: விசுவாசம் மற்றும் அவிசுவாசம். 27 இப்போது, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று இன்றிரவு உங்கள் விசுவாசம் சொல்லி, அது வெள்ளையாக இருக்கிறது என்று உங்கள் கண்கள் சொல்வது போலவே உங்கள் விசுவாசம் அதை உறுதியாக அறிவிக்குமானால், அது முடிந்தது. நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? "அது காணப் படாதவைகளின் நிச்சயம்." விசுவாசமுள்ளவர்கள் பயப்படுவதில்லை. கோழைகள் பதினாயிரம் முறை சாகிறார்கள் என்று சொல்லப்படுகிறது, ஆனால் ஒரு வீரன் ஒருபோதும் சாவதில்லை: விசுவாசமுள்ள, நம்புகிற ஒருவன். 28 இப்போது, விசுவாசம் என்பது ஒரு உறுதிப்பொருளாக இருக்கிறது, அது இதுபோல இருக்கிறது: நான் பட்டினியால் சாகும் நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னிடம் வந்து, "திரு. பிரான்ஹாம் அவர்களே, உங்கள் உயிரைக் காப்பாற்ற நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், "என்னிடம் ஒரு ரொட்டித் துண்டு இருந்தால், என் உயிர் பிழைக்கும்." நீங்கள் சொல்வீர்கள், "சரி, திரு. பிரான்ஹாம், ஒரு ரொட்டியின் விலை இருபத்தைந்து சென்ட்." "ஆம், ஐயா." "இதோ உங்கள் இருபத்தைந்து சென்ட்." 29 இப்போது, அந்த இருபத்தைந்து சென்ட் என்பது ரொட்டி அல்ல, ஆனால் அது ரொட்டியை வாங்கும் சக்தி. அந்த இருபத்தைந்து சென்ட் என் கைகளில் கிடைத்தவுடனே, ரொட்டியை சாப்பிடும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேனோ, அவ்வளவு மகிழ்ச்சியாக என் உயிர் காப்பாற்றப்பட்டதைக் குறித்து நான் இருக்க முடியும்; ஏனென்றால் ரொட்டியை வாங்கும் சக்தி என்னிடம் உள்ளது. 30 தேவன் உங்களைச் சுகமாக்க இயேசுவை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசித்து, அதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும்போது, வலி நீங்குவதற்கு முன்பே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்; அதாவது, உங்களுக்கு வலித்துக் கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கும் போதே, வலி நீங்கிய பிறகு இருப்ப தைப்போலவே, அதைவிட அதிகமாகவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். 31 என்னிடம் இருபத்தைந்து சென்ட் இருந்தால், என்னிடம் ரொட்டி இருக்கிறது என்று அர்த்தமல்ல, ஆனால் நான் மளிகைக் கடைக்குச் செல்லும் வரைக்கும், எனக்கு ரொட்டி கிடைக்கப் போகிறது என்று எனக்குத் தெரியும். நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கலாம், முட்செடிகள் நிறைந்த பாதைகள் வழியாகவும், வேலிகள் மேலாகவும், மலைகளைக் கடந்து, பள்ளத்தாக்குகளின் வழியாகவும் செல்ல வேண்டியிருக்கலாம், ஆனால் எல்லா நேரத்திலும் நான் மகிழ்ச்சியோடு என் இருபத்தைந்து சென்ட் நாணயத்தைப் பிடித்துக்கொண்டிருப்பேன், எனக்கு ரொட்டி கிடைக்கும், ஏனென்றால் என்னிடம் வாங்கும் சக்தி இருக்கிறது. 32 விசுவாசம் என்பது அதுதான். விசுவாசம் என்பது உங்களிடம் இருப்பதை நீங்கள் காட்டவும் நிரூபிக்கவும் கூடிய ஒன்று. அது மனதளவில் உருவாக்கப்பட்ட வெறும் கற்பனை அல்ல, அது உங்கள் உரிமையில் நீங்கள் வைத்திருக்கும் ஒன்று. விசுவாசமானது நம்பப் படுகிறவைகளின் உறுதி, நீங்கள் பார்க்காத, ருசிக்காத, தொடாத, முகராத, கேட்காத வைகளின் நிச்சயம். 33 இப்போது, பல நேரங்களில்... விசுவாசம் கொண்டிருப்பதற்குத் தகுதியான ஒரு நபர் இருக்கிறாரென்றால், அவர் ஒரு வேத பண்டிதராக, வேதத்தை வாசித்தவராக, வேதத்தைப் போதித்தவராக இருக்க வேண்டும்; அவரே விசுவாசம் உள்ளவராக இருக்க வேண்டும்; ஆனால் சில சமயங்களில் அது மிகவும் முரணாக இருக்கிறது. பரிசுத்த ஜீவியம் வாழ்ந்த, தேவனுக்கு முன்பாக நடந்த பரிசுத்தவான்கள் மேடையின் குறுக்கே நடந்து சென்று சுகமடையாமல் போவதையும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஒரு வேசி சுகமடைவதையும் நான் பார்த்திருக்கிறேன். 34 உங்கள் இரட்சிப்பின் தகுதியின் அடிப்படையில் தேவன் உங்களைச் சுகமாக்கு வதில்லை, உங்கள் விசுவாசத்தின் தகுதியின் அடிப்படையில் அவர் உங்களைச் சுகமாக் குகிறார், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் கிறிஸ்தவர்கள், "நான் ஒரு நல்ல நபர், நான் இன்னின்ன காரியங்களைச் செய்திருக்கிறேன்" என்பதால் தேவன் தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறார் என்று நினைக்கிறார்கள். அந்த எண்ணம் உங்கள் மனதில் வரும்போது, அதை உங்கள் மனதிலிருந்து அகற்றும் வரை நீங்கள் தேவனிடமிருந்து எதையும் பெற முடியாது. நீங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்களே ஒழிய, தேவன் உங்களுக்குக் கடமைப்பட்டவர் அல்ல. 35 கவனியுங்கள், நாம் சொன்ன இந்தச் சிறிய காரியத்தை ஆதரிப்பதற்காக இப்போது சில வேதவசனங்களை அல்லது கதாபாத் திரங்களை எடுத்துக்கொள்வோம். ஒருமுறை இஸ்ரவேலர் பெலிஸ்தர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், இந்தப் பெலிஸ்திய இராணுவம் மலையின் ஒரு பக்கத்தில் கூடியிருந்தது, இஸ்ரவேலர் மறுபக்கத்தில் கூடியிருந்தனர், அவர்களுக்கு இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. எதிரி தன்னை உங்களை விட மேலான நிலையில் இருப்பதாக நினைக்கும்போது, அவன் தற்பெருமை காட்டுவான். ஆனால் ஒருமுறை அவனை மூலையில் சிக்க வையுங்கள்! 36 இப்போது, அவர்களுக்குள் வரலாற்றுக்கு முந்தைய காலத்து மனிதனைப் போன்ற ஒரு பெரிய இராட்சதன் இருந்தான், அவன் பெயர் கோலியாத்; அவனது விரல்கள் பதினான்கு அங்குல நீளமிருந்தன, அவனது ஈட்டி ஒரு நெசவுக்காரனின் படைமரத்தைப் போல இருந்தது, ஒருவேளை இந்த மண்டபத்தின் பாதியளவு நீளமிருக்கலாம். அவன் எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மனிதனாக இருந்தான் என்று பாருங்கள். அவிசுவாசம் எவ்வளவு தந்திரமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன், அவன் இப்படிச் சொன்னான்: "இஸ்ரவேல் கனவான்களே, நாம் ஏன் இரத்தம் சிந்த வேண்டும்? நாம் அனைவரும் வெட்டப்படுவது போன்ற காரியங்கள் ஏன் நடக்க வேண்டும்? நான் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்: உங்களுக்குள் ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனை இங்கே அனுப்புங்கள், அவன் என்னைக் கொன்றால், நாங்கள் உங்களுக்குச் சேவை செய்வோம்; நான் அவனைக் கொன்றால், நீங்கள் எங்களுக்குச் சேவை செய்ய வேண்டும்." நிச்சயமாக, மேலோங்கிய நிலை, மிகப்பெரிய இராட்சதன், உங்களுக்குத் தெரியும், Ph.D., Double L.D. பட்டம் பெற்றவனைப் போல. ஓ, அவன் உண்மையில் எல்லா வற்றிலும் ஆயத்தமாக இருந்தான், அந்த சவாலை விடுத்தான். 37 கல்வியின் மூலமாகவும், சிறந்த சமூகங்களின் மூலமாகவும், YMCA போன்ற அமைப்புகள் மூலமாகவும் கிறிஸ்துவை தேசங்களுக்குக் கொண்டு செல்ல இன்று அவர்கள் முயற்சிப்பது போலத்தான் இதுவும் இருக்கிறது. அந்த விஷயங்களெல்லாம் சரியே, அவைகளுக்குரிய இடம் அவைகளுக்கு உண்டு, ஆனால் அது ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் இடத்தைப் பிடிக்க முடியாது. 38 சிறார் பிரிவைச் சேர்ந்த FBI அதிகாரிகளில் ஒருவரான கேப்டன் அல் ஃபாரர் (Captain Al Farrar) என்பவர், டகோமாவில் (Tacoma) நடந்த கூட்டத்தில், நான் மூன்று அல்லது நான்கு வாரங்கள் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது என்னைப் பின்தொடர்ந்தார். என்னுடைய பிரச்சாரங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பைசா பணமும் சரியான நோக்கத்திற்காகவே நேராகச் செல்கிறது என்று நான் அறிக்கை செய்திருந்தேன். அங்கே ஒரு மனிதருடைய சிறு பையன் இடுப்பு எலும்பு இல்லாதவனாய்... மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்திருந்தார்கள், அவனுக்கு இடுப்பு எலும்பு இல்லை. அந்தச் சிறிய பையன் ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு கூட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டபோது, பரிசுத்த ஆவியானவர் அவன் யார் என்றும், என்ன நடந்தது என்றும், அவனுடைய சிறிய விசுவாசத்தையும் சொல்லி, கட்டிலிலிருந்து எழும்பும்படி அவனிடம் கூறினார். அந்தச் சிறு பையன் கீழ்ப்படிந்து குதித்தான். அவன் தாய், "அவனால் முடியாது, அவனுக்கு இடுப்பு எலும்பு இல்லை!" என்றாள். 39 ஆனால் அவன் தன் தாயின் கைகளிலிருந்து வெளியே குதித்து, தன் குரலை உயர்த்தி சத்தமிட்டுக் கொண்டே தெருவில் ஓடினான்; அவனது தாய் பையன் படுத்திருந்த கட்டிலிலேயே விழுந்தாள். கேப்டன் அல் ஃபாரர் முன்னிலையில் அவர்கள் அவனை மருத்துவரிடம் எக்ஸ்-ரே எடுக்க அழைத்துச் சென்றார்கள், மருத்துவர், "அவனுக்குச் சரியான இடுப்பு எலும்பு இருக்கிறது" என்றார். 40 அந்த இளம் போலீஸ்காரர்களுக்குச் சுடுவதற்குப் பயிற்சி அளிக்கும் அடித்தளத்திற்கு கேப்டன் அல் ஃபாரர் என்னை அழைத்துச் சென்றார், அங்கே நின்று கொண்டு அவர் என்னிடம், "சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு பாப்டிஸ்ட், ஆனால் நீங்கள் பேசுகிற அந்தப் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்" என்றார். நான் சொன்னேன், "சரி, கேப்டன், அது மற்றவர்களுக்கு எப்படியோ அப்படியே பாப்டிஸ்ட்களுக்கும் உரியது." அவர், "சகோதரன் பிரான்ஹாம், அவர் எனக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?" என்றார். நான் சொன்னேன், "விருப்பமுள்ளவன் எவனோ அவன் வரட்டும்." அவர் சொன்னார், "நான் எங்கேயாவது ஒரு நல்ல அறையை ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் அங்கே என்னைச் சந்தியுங்கள், ஒருவேளை அவர் நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார். நகரத்திலே சிறந்த அறைகளை நான் ஏற்பாடு செய்கிறேன்," டகோமாவில். நான் சொன்னேன், "அது அவசியமில்லை, கேப்டன்." அவர், "அப்படியானால் அவர் என்னைச் சந்திப்பதற்கு நான் எங்கே செல்லலாம்?" என்று கேட்டார். நான் சொன்னேன், "இங்கேயே." அவர், "இந்தத் துப்பாக்கி சுடும் இடத்திலா?" என்றார். 41 நான் சொன்னேன், "ஒருவருக்காக அவர் ஒருமுறை திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் சென்றார், ஒருவருக்காக அக்கினிச் சூளைக் குள்ளும், ஒருவருக்காகச் சிங்கங்களின் கெபிக் குள்ளும் சென்றார்; கேப்டன், அவர் இங்கே உங்களிடம் வருவார்." அங்கே அவர் முழங்கால் படியிட்டுத் தன் இருதயத்தை கர்த்தராகிய இயேசுவிடம் ஒப்புக்கொடுத்து, பாக்கியவானாக மாறினார், இன்று தேவனைத் துதித்துக்கொண்டு வாழ்கிறார். அவர் பெற்றுக்கொண்டது முதல் அவருடைய படையில் உள்ள ஏறக்குறைய அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். ஓ, மெய்யான ஒன்று இருக்கிறது, மனிதர்கள் அதற்காக ஏங்குகிறார்கள். 42 இந்தப் பெரிய கோலியாத், "அப்படியே வைத்துக்கொள்வோம்" என்றான். 43 இப்போது, இஸ்ரவேலின் முழு இராணுவத்திலும் எவனாவது ஒருவனால் அதைச் செய்ய முடிந்ததென்றால், அது சவுலால் மட்டுமே முடியும். பைபிள் சொல்லுகிறது, அவன் தன் சேனையில் உள்ள மற்றெல்லா ரையும்விட தோளுக்குமேல் உயரமானவ னாயிருந்தான், சேனையில் உள்ள எந்த மனிதனை விடவும் அவன் கோலியாத்தின் அளவிற்கு நெருக்கமாக இருந்தான். மேலும், அவன் ஒரு போர்வீரன், அவனுக்கு எப்படிப் போரிடுவது என்று தெரியும், ஈட்டியை எப்படிக் கையாள்வது, கேடயத்தை எப்படி உயர்த்துவது, தாக்குதலை எப்படித் தடுப்பது என்று அவனுக்குத் தெரியும்; அவன் மனிதர்களுக்குப் பயிற்சி அளித்தான், அவன் ஒரு பிஷப் (bishop), தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்குத் தெரியும்; ஆனாலும், அவனுடைய எல்லாப் படிப்பு மற்றும் பயிற்சிகளுடன் அவன் ஒரு கோழையாக இருந்தான்; ஏனென்றால் அவன் தேவனை விசுவாசித்தான், ஆனால் அவன் ஒருபோதும் தேவனைச் செயலளவில், ஒரு அனுபவமாகப் பார்த்ததில்லை. 44 அதனால்தான் அமெரிக்காவில் தெய்வீக சுகத்திற்கான பெரிய கூட்டங்களை உங்களால் நடத்த முடியவில்லை, அனுபவமின்மையே அதற்குக் காரணம். மக்களுக்கு தேவன் யார் என்று தெரிவதில்லை, அவர்கள் அவரை ஏதோ ஒரு வரலாற்றுப் பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள்; அவர் நிகழ்கால தேவன். 45 எனவே ஒருநாள் கோலியாத் தன் பெருமையைப் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே ஒரு சிறிய, வாடிப்போன, சாதாரண தோற்றமுடைய ஒரு பையன், ஒரு சிறிய ஆட்டுத்தோல் மேலங்கியை அணிந்துகொண்டு வந்தான்; அவனுடைய அப்பா அவனுக்குச் சில உலர்ந்த திராட்சைகளையும், திராட்சை அடை தயாரிப்பதற்கும் கொடுத்திருந்தார்; தன் சகோதரர்களைச் சந்திப்பதற்காக அவன் சேனைக்கு அனுப்பப்பட்டான், அவன் பெயர் தாவீது. தாவீது பாளையத்திற்கு வந்து சேர்ந்த நேரத்தில், கோலியாத் வெளியே வந்து மீண்டும் தன் சவாலை விடுத்தான், "உங்களில் யாராவது வெளியே வந்து என்னுடன் ஏன் சண்டையிடக்கூடாது?" 46 அவன் அதைத் தவறான நேரத்தில் சொன்னான், அங்கே ஒரு சிறிய, சாதாரண தோற்றமுடைய பையன் இருந்தான், ஒருவேளை அவனுக்கு அதிகக் கல்வி இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான். சவுலுக்கு இருந்த பயிற்சி அவனுக்கு இல்லை, ஆனால் சவுலுக்குத் தெரியாத ஒரு தேவனை அவன் அறிந்திருந்தான். அவன் இஸ்ரவேல் மனிதர்களிடம், "விருத்த சேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியன் ஜீவ னுள்ள தேவனுடைய சேனையை நிந்திப்பதற்கு நீங்கள் இவனை அனுமதித்து வேடிக்கை பார்ப்பீர்கள் என்று சொல்கிறீர்களா? நான் போய் அவனோடு சண்டையிடுவேன்!" என்றான். 47 ஓ, என் ஆண்டவரே! ஒரு மிகச் சிறிய, வாடிப்போன, சாதாரண தோற்றமுடையவன்! அவன் சிவந்த மேனியுள்ளவன் என்று பைபிள் சொல்லுகிறது, சுமார் பதினேழு, பதினெட்டு வயதுடைய ஒரு சிறிய பையன், கடின உழைப்பினால் ஒருவேளை தோள்கள் சற்று கூன்விழுந்திருக்கலாம். "நான் போய் அவனோடு சண்டையிடுவேன்!" ஏன், அவனால் ஒரு விரலை எடுத்து இவன் இடுப்பைச் சுற்றி வளைத்திருக்க முடியும். ஆனால் இவனுக்குத் தைரியம் இருந்தது, ஏனென்றால் தான் செய்வது சரி என்று இவன் அறிந்திருந்தான். 48 ஒரு மனிதன் தான் செய்வது சரி என்று அறியும்போது, எதுவும் உங்களை அசைக்க முடியாது. மோசே செய்தது போல ஒரு மனிதன் இப்படியும் அப்படியும் பார்க்க மாட்டான்; தேவனுடைய உண்மையான ஊழியன் ஒரு போதும் இப்படியும் அப்படியும் பார்க்க வேண்டியதில்லை. அவன் எதிரியின் கோபத்தையோ அல்லது சில மனிதர்களின் மகிழ்ச்சியான கைதட்டல்களையோ பொருட் படுத்துவதில்லை; தான் எங்கே நிற்கிறோம் என்று அவனுக்குத் தெரிந்தால், தன்னை அனுப்பின கர்த்தராகிய தேவனுடைய ஐக்கியத்தை அவன் அனுபவிக்கிறான். அவனுடைய எதிரிகள் அதை விரும்புகிறார்களா அல்லது அவனுடைய நண்பர்கள் அவனைப் பார்த்து புன்னகைக்கிறார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை, கிறிஸ்துவின் உண்மையான ஊழியனுக்கு அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை; அவனுக்குச் செய்ய ஒரு வேலை இருக்கிறது, அவன் பார்த்து, "இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உங்களுக்குப் பிரியமா?" என்று கேட்க வேண்டியதில்லை. அவன் அந்தப் பக்கமாகப் பார்த்து ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கிறான். அதுதான் இன்றைய பிரச்சனை, நம்முடைய சபைப்பிரிவு அதை நம்புகிறதா என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தேவனே இரக்கமாயிரும்! நான் எப்போதாவது அந்த நிலைக்கு வந்தால், பைபிளை மூடி வைத்துவிட்டு ஊழியக்களத்தை விட்டு வெளியேறிவிடுவேன். நீங்கள் தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிறீர்கள், ஒரு கட்டளையைப் பெற்றிருக்கிறீர்கள். 49 தாவீது சொன்னான்... அவன் தன் சகோதரர்களை வெட்கப்படுத்தினான். அவனு டைய சகோதரர்கள், "ஓ, உன் துணிகரம் எங்களுக்குத் தெரியும், நீ எதையாவது செய்ய முயற்சிக்கிறாய், காட்டிக்கொள்ள முயற்சிக் கிறாய்" என்றார்கள். 50 இந்தச் செய்தி சவுலுக்கு எட்டியது, சவுல், "அந்தச் சிறு பையனை இங்கே கொண்டு வாருங்கள்" என்றான். "பையனே, அப்படிப் பட்ட வார்த்தையைச் சொல்வதன் அர்த்தம் என்ன? நீ வெறும் ஒரு இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரனாய் இருக்கிறான். உனக்கு ஒரு வாய்ப்புக் கூட இல்லை!" என்றான். 51 தாவீது, "ஐயா, என்னை மட்டும் போக விடுங்கள்" என்றான். பாருங்கள், தேவன் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார் என்று அவனுக்குத் தெரியும். தேவன் வாக்குத்தத்தம் பண்ணும்போது, அவர் தம் வாக்குத்தத்தத்தில் உறுதியாய் இருப்பார். தேவன் தம்முடைய பிள்ளைகளைச் சுகமாக் குவதாக வாக்குத்தத்தம் பண்ணியி ருக்கிறார், அவர் அந்த வாக்குத்தத்தத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்; தேவன் நமக்கு பரிசுத்த ஆவியை அனுப்புவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், அவர் அந்த வாக்குத் தத்தத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். மற்ற உலகம் என்ன சொன்னாலும், அண்டை வீட்டுக்காரர் என்ன சொன்னாலும் பயப்பட வேண்டாம். தேவன் என்ன சொன்னார்? 52 சவுல் அதை ஓர் அறிவார்ந்த நிலையில் நம்பினான், ஆனால் தாவீதுக்கு ஒரு அனுபவம் இருந்தது. சவுல், "ஆனால் நீ இதைச் செய்வதற்கு முன், நீ ஒரு கல்லூரிக் கல்வியைப் பெற வேண்டும், நீ... நீ என்னுடைய பட்டங்களை அணிந்துகொள்வது நல்லது, நான் என்னுடைய பட்டத்தை உனக்குத் தருகிறேன்" என்றான். 53 எனவே அவன் தன் கவசத்தை அவன் மேலும், தன் தலைக்கவசத்தை அவன்மேலும் அணிவித்தான். தன் சேனையில் உள்ள அனைவரையும் விடத் தோளுக்குமேல் உயரமான ஒரு மனிதன், இவ்வளவு உயரமே உள்ள ஒரு மிகச் சிறிய பையனுக்குத் தலைக்கவசத்தை அணிவிப்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது தலை, காதுகள், தோள்கள் மற்றும் எல்லாவற்றையும் மூடிக் கொண்டது என்று நான் நினைக்கிறேன். அவனுடைய பெரிய, அகலமான தோள்கள்! அப்படிப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு, முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள அங்கே நின்றுகொண்டிருந்த தாவீது பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பான்? 54 அவன், "இந்தக் கவசங்களை என் மேலிருந்து கழற்றுங்கள், இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது" என்றான். தனது சபை சார்ந்த அங்கி தேவனுடைய மனிதனுக்குப் பொருந்தவில்லை என்பதை சவுல் கண்டுகொண்டான். "உங்களுடைய Ph.D. பட்டங்கள் மற்றும் அதுபோன்றவைகளைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் நான் எதைக் குறித்து அனுபவம் பெற்றிருக்கிறேனோ அதோடு என்னைச் செல்ல விடுங்கள்" என்று அவன் சொன்னான். 55 ஆமென். நான் உண்மையிலேயே மிகுந்த பக்தியுணர்வோடு இருக்கிறேன், உண்மை யாகவே. நான் வேடிக்கையாக நடப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் உணர்ந்த அதே விதத்தில் நீங்களும் உணர்ந்தால், நீங்களும் ஒருவேளை அப்படித்தான் செய்வீர்கள். கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தாவீது நடனமாடியபோது நான் உணர்வது போலவே உணர்கிறேன்; அவனுடைய மனைவி அவனைப் பார்த்து நகைத்து, "உனக்கு அது பிடிக்கவில்லையா? இதைப் பார்!" என்றாள். "அவன் என் இருதயத்திற்கு ஏற்றவன்" என்று தேவன் சொன்னார். தான் என்ன பேசுகிறோம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. 56 அவன், "ஏன், உன்னால் அந்த இராட்சதனுடன் சண்டையிட முடியாது!" என்றான். 57 அவன், "இந்த பட்டங்களையும், இந்தச் சபைப் பத்திரங்களையும், எல்லாவற்றையும் என்மேலிருந்து எடுத்துவிடுங்கள், நான் ஒருமுறை விடுதலையாகிறேன்" என்றான். அவன் சொன்னான்: "நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன், நான் என் அப்பாவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் ஒரு கரடி வந்து ஒன்றைப் பிடித்தது, நான் என் கவணெறியை எடுத்து அதை அடித்து வீழ்த்தினேன், அந்த ஆட்டுக் குட்டியை மீட்டுக் கொண்டு வந்தேன். ஒரு சிங்கம் வந்து ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஓடியது, நான் அதையும் அடித்து வீழ்த்தினேன். நான் அதனிடத்தில் சென்றபோது அது எனக்கு விரோதமாய் எழும்பினது, நான் அதைக் கொன்றேன்." அவன் சொன்னான், "கரடி மற்றும் சிங்கத்தின் கையிலிருந்து என்னை விடுவித்த தேவன், ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நிந்திக்கிற அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனின் கைகளிலிருந்து எவ்வளவு அதிகமாய் என்னை விடுவிப்பார்?" 58 பாருங்கள், அவனுக்கு விசுவாசம் இருந்தது, ஏனென்றால் அவனுக்கு அனுபவம் இருந்தது. அவரைப் பற்றி வாசிப்பதைத் தவிர, தேவனை ஒருபோதும் அறியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக அனுபவம் இல்லை, என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது; ஆனால் எப்போதாவது தேவனைச் சந்தித்து ஒரு அனுபவத்தைப் பெற்ற மனிதன், அதுவே போதுமானது. 59 தாவீது, "ஓர் ஆட்டுக்குட்டியின் உயிரைக் காப்பாற்ற அவர் அதைச் செய்தாரென்றால், தம்முடைய மக்களின் உயிரைக் காப்பாற்ற எவ்வளவு அதிகமாகச் செய்வார்?" என்றான். அவன், "நீ எப்படி அதைச் செய்யப் போகிறாய்?" என்று கேட்டான். "நான் இந்தச் சிறிய கவணெறியை எடுத்துக்கொண்டு போகிறேன்" என்றான். அவன் ஐந்து கூழாங்கற்களை எடுத்து, ஐந்து விரல்களில் வைத்துக்கொண்டான்; கவணெறி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும், சிறுவர்களாகிய நாங்கள் அதைச் சுழற்றுவோம். 60 அவன் அவனைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பழைய இராட்சதன் அவனைப் பார்த்து நகைத்தான், "பையனே, உனக்குக் கல்வி கூட இல்லை, நீ நல்ல இலக்கணம் கூடப் பேசுவதில்லை. நீ எப்படி அதைச் செய்யப் போகிறாய்?" என்றான். 61 ஆனால் அவனிடம் என்ன இருந்தது? அவனிடம் ஐந்து கற்கள் இருந்தன: J-e-s-u-s (இயேசு), அவனது f-a-i-t-h (விசுவாசம்) என்னும் கைகளில் சுற்றப்பட்டிருந்தது, ஏதோ ஒன்று நடக்க வேண்டியிருந்தது. இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தில் அவனுக்கு ஒரு அனுபவம் இருந்தது. தேவன் அந்தக் கல்லைச் சரியாக வழிநடத்தினார், அந்த இராட்சதன் கீழே விழுந்தான், மற்றவர்கள் தைரியம் கொண்டார்கள். 62 சில ஆண்டுகளுக்கு முன்பு, "அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன" என்று சபைகள், பூரண சுவிசேஷ சபைகள் சொன்னபோது, யாரோ ஒருவர் ஒருநாள் வெளியே வந்தார், இப்போது அவர்கள் அனைவரும் தைரியம் கொண்டிருக்கிறார்கள், நாம் எதிரியைச் சுவர் வரைக்கும் விரட்டியடித்து, வெட்டி வீழ்த்திக் கொண்டி ருக்கிறோம். விசுவாசமுள்ள ஒரு மனிதனாகிய தாவீது மீண்டும் செயல்படுவதற்கான நேரம் இது. 63 கல்தேயர் தேசத்து ஊர் (Ur) என்ற பட்டணத்திலிருந்து அழைக்கப்பட்ட ஆபிரகாம், ஒரு புறஜாதி, சினார் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு சாதாரண மனிதன்; ஆனால் அவனுக்கு எழுபத்தைந்து வயதாகவும், அவன் மனைவி சாராளுக்கு அறுபத்தைந்து வயதாகவும் இருந்தபோது தேவன் அவனுடன் பேசினார்; அவர்கள் திருமணமாகி... அவளுக்கு சுமார் பதினெட்டு வயதிலிருந்து, குழந்தையே இல்லை. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்று தேவன் ஆபிரகாமிடம் சொன்னார், ஆபிரகாம் தேவனை விசுவா சித்தான். தேவன் சொன்னதற்கு முரணான எதையும் இல்லாதவைகளைப் போலவே அவன் கருதினான், தேவன் தம்முடைய வாக்குத் தத்தத்தைக் காப்பாற்ற வல்லவர் என்று விசுவாசித்தான். 64 உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? எழுபத்தைந்து வயதுடைய ஒரு கிழவனும், அறுபத்தைந்து வயதுடைய ஒரு கிழவியும், இதை நினைத்துப் பாருங்கள், மருத்துவரிடம் சென்று, "டாக்டர், நாங்கள் மருத்துவமனையில் ஒரு அறையைத் தயார் செய்ய விரும்புகிறோம், என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது" என்று சொல்வதை. "என்ன? மாதவிடாய் நின்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகா?" "ஆம், அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. நாங்கள் டவுனுக்குச் சென்று எங்களால் முடிந்த அனைத்து துணிகளையும் (birdeye), ஊசிகளையும், பூட்டீஸ்களையும், எல்லாவற்றையும் வாங்கி வந்திருக்கிறோம், எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது." "ஐயா, உங்களுக்கு எப்படித் தெரியும்?" "தேவன் அப்படிச் சொன்னார், அதுவே முடிவு. தேவன் அப்படிச் சொன்னார்." "ஏன்," அவர்கள் சொல்வார்கள், "பாவம் அந்த வயதானவர் மூளை குழம்பிவிட்டார். அவரிடம் ஏதோ கோளாறு இருக்கிறது." 65 தேவனுக்காக நின்ற ஒவ்வொரு மனிதனும் ஒரு நரம்புத் தளர்ச்சியுள்ளவன் (neurotic), அல்லது ஏதோ கோளாறு உள்ளவன் என்றே கருதப்பட்டிருக்கிறான். அங்கே ஏதோ கோளாறு இருக்கிறது, தேவன் சொன்னபடியால், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைப்பதின் மூலம், அவன் சாகப்போகும் பாவியிலிருந்து நித்திய ஜீவனுள்ள பரிசுத்தவானாகத் தன் நிலையை மாற்றிக் கொண்டான். 66 முதல் இருபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆபிரகாம் சென்று, "சாராள், அன்பே, நீ எப்படி உணருகிறாய்?" என்று கேட்பதை என்னால் பார்க்க முடிகிறது. "வித்தியாசம் ஒன்றுமில்லை." "சரி, தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நாம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்." நிச்சயமாக. 67 ஒரு வருடம் கடந்தது: "சாராள், நீ எப்படி உணருகிறாய்?" "வித்தியாசம் ஒன்றுமில்லை." "தேவனுக்குத் துதி உண்டாவதாக, எப்படியும் நாம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்." 68 இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தன: அவனுக்கு நூறு வயது, அவளுக்கு தொண்ணூறு வயது, சிறிய, வயதான பாட்டி, ஒரு சிறிய சால்வையுடன், "அன்பே, நீ எப்படி உணருகிறாய்?" "வித்தியாசம் ஒன்றுமில்லை." "தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியும் நாம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்!" 69 ஏன்? தேவன் என்ன சொன்னாரோ, அந்த வாக்குத்தத்தத்தை தேவன் காப்பாற்ற முடியும் என்று அவன் பொறுமையோடு விசுவாசித்தான். நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொண்ட முதல் இரவில் சுகமடைய வில்லை என்றால், "சரி, இதில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்" என்கிறீர்கள். அதில் என்ன இருந்தாலும் பரவாயில்லை, தேவன் அப்படிச் சொன்னார், அதுவே முடிவு, தொடர்ந்து செல்லுங்கள். ஆபிரகாம் அவரை விசுவாசித்தான். 70 மோசே, நாற்பது ஆண்டுகள் இறையியல் பயிற்சி பெற்ற பிறகு, ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடிய மிகச் சிறந்த பயிற்சி... எகிப்தில் தனது மருத்துவப் படிப்பில் கற்ற கணிதத்தையோ அல்லது வேறு எந்தப் படிப்பையோ அவரால் நினைவுபடுத்திப் பார்த்திருக்க முடியாது. எகிப்தியர்களிடம் இன்று நம்மிடம் இல்லாத மருந்துகளும் பொருட்களும் இருந்தன, நம்மால் கட்ட முடியாத பிரமிடுகளை அவர்கள் கட்டினார்கள், சாயம் இன்னும் இயற்கையாகவே தோன்றும் வகையில் துணிகளுக்குச் சாயம் ஏற்றினார்கள், மம்மிகளை உருவாக்க உடல்களைப் பதப்படுத்தினார்கள், இன்று நம்மால் ஒன்றைக்கூட உருவாக்க முடியாது. அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருந்தார்கள், மோசே எகிப்தியர்களின் எல்லா ஞானத்திலும் பயிற்றுவிக்கப்பட்டான், அவர் களின் எஜமானர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு. 71 ஆனால் அவன் ஒருமுறை ஒரு கூட்ட மனிதர்களுடன் வனாந்தரத்திற்குச் சென்றான், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை நாற்பது ஆண்டுகள் வழிநடத்தி, அவர்களில் பலவீனமான ஒருவர்கூட இல்லாமல் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தான். 72 டாக்டர் மோசே என்ன மருந்துச் சீட்டு வைத்திருந்தார் என்பதை அறிய உங்களில் சில மருத்துவர்கள் விரும்பவில்லையா? ஒவ்வொரு இரவும் எத்தனை குழந்தைகள் பிறந்தன? டாக்டர் மோசே தனது பையில் ஒரு மருந்துச் சீட்டை வைத்திருந்தார்; என்னிடம் ஒரு சிறிய ரகசியம் இருக்கிறது. நான் அதை உங்களுக்கு வாசிக்கட்டுமா? மருத்துவர்களே, இதோ: "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்." அதுதான் அவனுடைய மருந்துச் சீட்டு, அது நாற்பது ஆண்டுகளாகப் பல மில்லியன் மக்களுடன், அவர்களில் பலவீனமான ஒருவர்கூட இல்லாமல் வேலை செய்தது. 73 ஏனெனில் ஒருநாள் வனாந்தரத்தின் பின்பகுதியில் தேவன் அவரிடம் வந்தார், அவருக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. அவன் எகிப்தியனைக் கொன்றபோது, இப்படியும் அப்படியும் பார்த்து, ஒரு மனிதனைக் கொன்றுவிட்டு பயந்தான், அவன் தேவனை ஒருபோதும் சந்தித்ததில்லை; ஆனால் தேவனைச் சந்தித்த பிறகு, அவன் கீழே போய் முழு எகிப்திய இராணுவத்தையும் மூழ்கடித்தான், ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்கு விசுவாசம் இருந்தது, அதன் அர்த்தம் என்னவென்று அவனுக்குத் தெரியும். நிச்சயமாக. அவன் தேவனை விசுவாசித்தான், அதரிசனமா னவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான். அவன் தேவனைக் கண்டுபிடித்து, தேவனைச் சந்தித்து, ஒரு அனுபவத்தைப் பெற்ற பிறகு, அவன் அதில் விசுவாசம் வைத்தான். 74 இயேசு சீமோனிடம் அவனது பெயர் என்ன என்றும், அவனது அப்பாவின் பெயர் என்ன என்றும் சொல்வதைக் கேட்ட பிறகுதான், பிலிப்பு நாத்தான்வேலிடம், "நாங்கள் அவரைக் கண்டோம், வந்து பார்" என்று சொல்ல முடிந்தது. 75 நாத்தான்வேல் இயேசுவின் பிரசன்னத் திற்குள் நடந்து வந்த பிறகு, இயேசு, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்!" என்று சொன்னார். அவன், "நீர் என்னை எப்படி அறிவீர்?" என்றான். "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போதே..." என்றார். அதற்குப் பிறகுதான், "நீர் இஸ்ரவேலின் ராஜா; நீர் தேவனுடைய குமாரன்" என்று அவனால் சொல்ல முடிந்தது, ஒரு அனுபவத்தைப் பெற்ற பிறகு. 76 கிணற்றடியில் நின்றிருந்த ஒரு வேசிக்கு, அங்கே அவள் ஒரு யூதரைப் பார்த்த பிறகு, அந்த யூதர் அவளிடத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டார், பின்பு அவர், "என்னிடத்தில் தண்ணீர் கேள்" என்றார். 77 அவர் அவளுடைய பிரச்சனையை கண்டுபிடித்தார், அவள் தன்னுடைய ஆறாவது கணவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்றும், அது சரியல்ல என்றும் அவளிடத்தில் சொன்னார். அவர் அவளுடைய பாவத்தை அவளிடத்தில் சொன்ன பிறகுதான், அவள் நகரத்திற்குள் ஓடிச்சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனிதரை வந்து பாருங்கள். இவர் மேசியாதானே?" என்று சொல்ல முடிந்தது. அவள் அதைப் பார்த்த பிறகு, அது அவளுக்குள் கிரியை செய்த பிறகு; உண்மையான ஒன்று சம்பவிக்கிறது. 78 அந்தப் பெண் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகமடைந்த பிறகுதான், கூட்டத்திலிருந்த அனைவரும் அவருடைய வஸ்திரத்தைத் தொட விரும்பினார்கள். அவளுடைய இரத்தப்போக்கு நின்ற பிறகுதான், அவளால் சாட்சி கொடுக்க முடிந்தது, அதற்குப் பிறகுதான். 79 இன்றிரவு நாம் வாசித்த வேதபகுதியில் இயேசு, அந்த மரத்தைப் பார்த்து, "இனி ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனி புசியாதிருக்கக்கடவன்" என்று சொன்னபோது, மறுநாளே அது பட்டுப்போயிருந்தது. பேதுரு அதைக்கவனித்தான். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தம்முடைய சீஷர்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். பேதுரு, "இதோ, நீர் சபித்த மரம் பட்டுப்போயிற்று" என்றான். அவர், "தேவனில் விசுவாசமாயிருங்கள்" என்றார். 80 அவர் செய்த ஒரு அற்புதத்தைப் பேதுரு பார்த்த பிறகு, அவர், "நீங்கள் இந்த மலையைப் பார்த்து, 'பெயர்ந்து போ' என்று சொல்லி, சந்தேகப்படாமல், நீங்கள் சொன்னது நடக்கும் என்று விசுவாசித்தால், நீங்கள் சொன்னதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்" என்று சொன்னார். ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து உண்மையான ஒன்று வருகிறது. 81 சகோதரனே, இன்றிரவு உலகம் உண்மையான ஒன்றை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேசத்து மக்களும், உலகின் மற்ற பகுதிகளும் உண்மையான ஒன்றுக்காகச் சபையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானம் நமக்கு மரணத்தைக் கொண்டுவந்திருக்கிறது, சமூகம் நமக்குச் சீர்கேட்டைக் கொண்டுவந்திருக்கிறது, சபை அமைப்புகள் நமக்குச் சண்டைகளைக் கொண்டுவந்திருக்கின்றன, மக்கள் உண்மையான ஒன்றை விரும்புகிறார்கள். அவர்கள் அந்த வெளிப்படுதலைப் பார்க்கும்போது, அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். தேவனிடத்தில் அது இருக்கிறது. நாம் ஒரு தேவனைப் பற்றிப் பேசுகிறோம், அவர் எங்கே இருக்கிறார்? 82 சில காலத்திற்கு முன்பு... ஒரு அனுபவத்தை விவரிக்க இது என்னைத் தூண்டுகிறது. உங்களுக்குத் தெரியும், நான் வேட்டையாட விரும்புகிறேன், நான் வேட்டை யாடிக் கொல்வதற்காக அவ்வளவாகச் செல்வ தில்லை, நான் தேவனோடு தனித்திருப் பதற்காகவே செல்கிறேன். நான் சிறு பையனாக இருந்தபோது, இங்கே நியூ இங்கிலாந்து (New England) மாநிலங்களுக்கு அருகில், இங்கே ஆண்ட்ரோஸ்காக்கின் (Androscoggin) நதிக் கரையில், உம்பகோக் (Umbagog) ஏரியைச் சுற்றிலும், மூஸ்ஹெட் (Moosehead) பகுதியிலும், கீழே உள்ள வெள்ளை மலைகளிலும் (White Mountains) வேட்டை யாடுவது வழக்கம். 83 அங்கே எனக்கு இருந்த ஒரு வேட்டைத் தோழரை நான் நினைவுகூருகிறேன், நான் வேட்டையாடியவர்களிலேயே அவர் மிகச் சிறந்த வேட்டைக்காரர்களில் ஒருவர், ஒரு வழக்கமான, சிறிய யாங்கி (Yankee) மனிதர், மிகச் சிறந்த மனிதர். காட்டில் நீங்கள் ஒருபோதும் அவரைத் தவறவிட முடியாது, அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, அவரைப் போகவிடலாம். அவருக்குத் தன் தொழில் தெரியும், ஆனால் நான் பார்த்த மனிதர்களிலேயே மிகக் கொடுமையானவர்களில் அவரும் ஒருவர். ஓ, அவர் இருதயத்தில் கொடுமையானவர். நான் வருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் சிறிய மான் குட்டிகளைச் சுடுவார். 84 சட்டம் ஒரு மான் குட்டியைச் சுடலாம் என்று சொன்னால், அது பரவாயில்லை. இப்போது, மானின் அளவு முக்கியமல்ல, ஆனால் அதைக் குறித்துக் கொடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பத்து அல்லது பதினைந்து மான்களைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆபிரகாம் ஒரு கன்றுக்குட்டியை வெட்டினான், தேவன் அதை புசித்தார், எனவே மான் குட்டி வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் கொடுமையாக நடந்து கொள்வதும், தன்னை வெளிக் காட்டிக்கொள்ள விரும்புவதுமே தவறு. அநேக மக்கள் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்ள விரும்புகிறார்கள்; அவர்கள் உங்களை 'புரளுகிறவன்' (holy-roller) என்று அழைப்பார்கள், அல்லது மதவெறியன் என்றோ, அல்லது அதுபோன்ற வேறேதோ பெயரைச் சொல்லி அழைப்பார்கள், அவர்கள் சாமர்த்தியமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்கள் உங்களைக் காயப்படுத்தவில்லை, தேவனைத்தான் காயப்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் உணருவதில்லை. "நீ அந்தக் கூட்டத்திற்குச் சென்றாயா?" வெட்கக்கேடு! 85 "உங்கள் கண்கள் பாக்கிய முள்ளவைகள்..." 86 ஆனால் இந்த மனிதர், நான் வருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அந்தச் சிறிய மான்களைச் சுடுவார், நான், "நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்பேன். "ஓ," அவர், "பிரசங்கியே, நீ ஒரு கோழை நெஞ்சுள்ளவன். அதுதான் உங்கள் பிரசங்கி மார்களிடம் உள்ள பிரச்சனை, நீங்கள் வெறும் கோழை நெஞ்சுள்ளவர்கள்" என்பார். மேலும், "பில்லி, உன்னுடன் வேட்டையாட எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ மிகவும் இளகின மனம் கொண்டவன், நீ அப்படிச் செய்யக்கூடாது, நீ ஒரு ஆணாக இருக்க வேண்டும்!" என்பார். நான் சொன்னேன், "பெர்ட், ஒரு மனிதனுக்குள் எவ்வளவு மிருகத்தன்மை இருக்கிறது என்பதைக் கொண்டு அவன் அளவிடப்படுவதில்லை, ஒரு மனிதன் குணாதி சயத்தைக் கொண்டே அளவிடப்படுகிறான்." 87 ஆறு அடி உயரமும், இருநூற்று இருபது பவுண்டு எடையும், முழுக்க தசைகளுமாக இருந்தும், அவனுக்குள் ஒரு அவுன்ஸ் கூட மனிதத்தன்மை இல்லாத மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அது சரி. ஒரு மனிதன் அவனுடைய குணாதிசயத்தைக் கொண்டே அளவிடப்படுகிறான். ஒரு தாயின் கைகளி லிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அவளைக் கற்பழிக்கிறவனை, நீங்கள் மனிதன் என்று அழைக்க மாட்டீர்கள். கொள்கை: கிறிஸ்து உருவத்தில் பெரியவர் அல்ல, நாம் அவரை விரும்பத்தக்க சௌந்தரியமும் அவரிடத்தில் இல்லை, அவருக்கு இணையாக ஒரு மனிதனும் இருந்ததில்லை. உனக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பொருத்து, குணாதிசயத்தினால் அது அளவிடப்படுகிறது. 88 எனவே, அவர், "ஓ, நீயே யோசித்துப் பார்" என்றார். 89 ஒரு வருடம் நான் மேலே சென்றிருந்தபோது, அவர் தனக்காக ஒரு சிறிய விசிலை (whistle) செய்திருந்தார், அந்தச் சிறிய விசிலை ஊதினால், ஒரு சிறிய, மான் குட்டி அழுவதைப்போலவே சத்தம் வரும். நான், "நிச்சயமாக, நீங்கள் அதைப் பயன்படுத்தப் போவதில்லை!" என்றேன். 90 "ஓ," அவர், "இதோ பார், நீ ஒரு கோழை நெஞ்சுள்ளவன், பையனே" என்றார். 91 அன்று நாங்கள் வேட்டையாடச் சென்றோம், கொஞ்சம் பனி பெய்தது, முந்தின நாள் இரவு கைகளை உயர்த்தின சகோதரர் களாகிய உங்களுக்குத் தெரியும், நீங்கள் மான் வேட்டைக்காரர்கள், தடயத்தைப் பார்க்க சுமார் ஆறு அங்குல பனி இருந்தது. நாங்கள் நாள் முழுவதும் சென்றோம், நாட்டின் கீழ்ப்பகுதியில் மான்கள் அரிதாகவே இருந்தன, எனவே நாங்கள் ஒரு கால்தடத்தைக் கூட காணவில்லை; வேட்டைக்காலம் வரும்போது, மான்கள் ஒளிந்துகொள்ளும். 92 அது வேட்டைக்காலத்தின் பிற்பகுதி, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது, எங்காவது சுற்றித் திரியும் ஒரு பெரிய ஆண் மானைக் கண்டுபிடிக்க முடியுமா அல்லது காட்டுக்குள் செல்லலாமா என்று பார்க்க நான் தாமதமாக வந்திருந்தேன். நாங்கள் மதியம் வரை வேட்டையாடினோம், ஒரு தடயத்தைக் கூட காணவில்லை. பிறகு இந்த அரங்கம் அளவுள்ள ஒரு சிறிய திறந்தவெளியை நாங்கள் அடைந்தோம், அவர் குனிந்து உட்கார்ந்ததை நான் கவனித்தேன், அவர் மதிய உணவை எடுப்பதற்காகத் தன் கோட்டுக்குள் கைவிடுகிறார் என்று நான் நினைத்தேன். 93 பொதுவாக, நாங்கள் அப்படித்தான் செய்வோம், நாங்கள் எங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வோம், மதிய வேளையில் சாப்பிடுவோம், பிறகு பிரிந்து இரவு முகாமிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் வேட்டையாடுவோம், வேறு வழியாகச் செல்வோம், மற்றொரு பகுதி வழியாக, ஒருவருக்கொருவர் மானைத் துரத்திவிடுவது போலச் செல்வோம். 94 அவர் கீழே உட்கார்ந்தபோது, அவர் தன் மதிய உணவை எடுக்கிறார் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் தன் பையிலிருந்து அந்தச் சிறிய விசிலை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார். நான், "நிச்சயமாக, அவர் அதை ஊதமாட்டார்!" என்று நினைத்தேன். ஆனால் அவர் அதைத் தன் வாயில் வைத்து ஊதினார், ஒரு சிறிய குழந்தை அழுவதைப் போலவே சத்தம் வந்தது. அந்தத் திறந்த வெளியின் மறுபக்கத்தில் ஒரு பெரிய, அழகான பெண் மான் எழுந்து நின்றது, ஓ, மிகவும் அழகாக, பெரிய காதுகளுடனும், முகத்தில் நரம்புகள் தெரிய, பெரிய, கருமையான கண்களுடன் இருந்தது. அவள் பார்க்க லாவகமாக இருந்தாள். பெண் மான் என்பது ஒரு தாய் மான். அவள் சில புதர்களுக்கு அடியில் மறைந்திருந்தாள், அங்கிருந்து அவள் எழுந்து நின்றாள். அவர் அந்தக் கள்ளத்தனமான பார்வையோடு என்னைத் திரும்பிப் பார்த்தார். நான், "நிச்சயமாக, பெர்ட், நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள்!" என்று நினைத்தேன். அவர் அதை மீண்டும் ஊதினார், அவள் நேராக அந்தத் திறந்தவெளிக்குள் நடந்து வந்தாள். 95 சகோதரர்களே, ஒரு மான், பட்டப் பகலில், வேட்டைக்காலத்தில், தரையில் பனி இருக்கும்போது, அப்படி ஒரு திறந்தவெளியில் வருவது அசாதாரணமானது என்பது உங்க ளுக்குத் தெரியும். அவள் நேராக வெளியே வந்தாள். அது என்ன? அவள் ஒரு தாய், அவளிடம் உண்மையான ஒன்று இருந்தது, ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது, இயற்கை யிலேயே அவள் ஒரு தாய். 96 அவள் திறந்தவெளிக்குள் வந்தாள். அவர் அந்த .30-06 ரக துப்பாக்கியின் லிவரை (lever) உயர்த்தி, நூற்று எண்பது கிரைன் (grain) அளவுள்ள மென்மையான முனை கொண்ட தோட்டாவை உள்ளே தள்ளுவதை நான் பார்த்தேன். அவர் குறிதப்பாமல் சுடுபவர். அந்த ஸ்கோப் (scope) கீழே இறங்கியது, அந்தக் குறி (crosshairs) அவளுடைய விசுவாசமான நெஞ்சின் நேராக இருந்தது. நான், "ஓ தேவனே, அவர் அவளுடைய அருமையான இருதயத்தைப் பிளந்துவிடுவாரே!" என்று நினைத்தேன். இருபது கெஜ தூரத்தில்கூட இல்லை. 97 அந்த லிவர் கீழே இறங்கியபோது, அந்த மான் திரும்பியது, வேட்டைக்காரன் அங்கே இருக்கிறான் என்று அதற்குத் தெரியும், ஆனால் தன் குழந்தை ஆபத்தில் இருக்கிறது. அவள் சும்மா நடிக்கவில்லை, அவள் ஒரு உண்மையான தாய், அவளிடம் உண்மையான ஒன்று இருந்தது, அவள் ஒரு மாயக்காரி அல்ல, அவள் உண்மையானவள். அவள் இன்னும் வெளியே நடந்து வந்தாள். பெர்ட் அவளுடைய இருதயத்தைச் சுடுவதற்கு குறி வைப்பதைப் பார்த்தபோது, நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன், "என்னால் இதைப் பார்க்க முடியாது! தன் குழந்தையைத் தேடுகிற அந்த அருமையான தாயின் இருதயத்தை அவரால் எப்படிச் சுட முடியும்? அவரால் எப்படி அவளுடைய இருதயத்தைச் சுட முடியும்?" என்று நான் சொன்னேன். நான், "ஓ தேவனே, அதைச் செய்ய அவரை அனுமதிக்காதேயும்!" என்று நினைத்தேன். 98 நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அந்தத் துப்பாக்கியின் முழக்கத்திற்காக ஒவ்வொரு கணமும் காத்திருந்தேன், ஆனால் அது வெடிக்கவில்லை, நான் திரும்பிப் பார்த்தேன், அந்தத் துப்பாக்கியின் குழல் இப்படி ஆடிக்கொண்டிருந்தது. நான் அவரைப் பார்த்தேன், அவர் துப்பாக்கியைத் தரையில் எறிந்துவிட்டு, என் காற்சட்டை முனையைப் பிடித்துக்கொண்டு, "பில்லி, எனக்குப் போதுமான அளவு கிடைத்துவிட்டது" என்றார். அவர், "அன்பை உண்டாக்கக்கூடிய அந்த இயேசுவினிடத்திற்கு என்னை நடத்தும்" என்றார். 99 அது என்ன? அவர் உண்மையான அன்பு வெளிப்படுவதைக் கண்டார், உண்மையான ஒன்றை அவர் கண்டார். அங்கே அந்தப் பனிமேட்டின் மேல், நான் அவரை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் நடத்தினேன், ஏனென்றால் அவர் உண்மையான ஒன்றைக் கண்டு கொண்டார். அந்தத் தாய் மான், ஒரு சபை அங்கத்தினரைப் போல நடிக்கவில்லை, அவள் உண்மையானவளாக இருந்தாள். 100 நண்பனே, அதைத்தான் இன்று உலகம் உங்களிலும் என்னிலும் பார்க்க விரும்புகிறது, அவர்கள் உண்மையான ஒன்றை விரும்புகிறார்கள். நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்து, ஒரு அனுபவத்தைப் பெறும் வரைக்கும் உங்களுக்கு அது எப்படிக் கிடைக்கும்? விசுவாசத்தைக் கொடுப்பதற்கு உங்களுக்குள் ஏதாவது ஒன்று இருந்தாலொழிய, உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்க முடியும்? உண்மையானது! அந்தத் தாய் மான் தன் குட்டியின்மேல் வைத்திருந்த தேவனுடைய அன்பைப் போன்ற அன்பை உங்கள் இருதயத்தில் கொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்களா? சுயநலமில்லாமல், பேராசை இல்லாமல், ஒன்றுமில்லாமல், நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது, "எப்போதாவது ஒரு பரிசுத்த மான, தேவபக்தியுள்ள பெண் அல்லது ஆண் இருந்தார்கள் என்றால், இதோ போகிறார்கள்" என்று அண்டைவீட்டார் சொல்லும்படிக்கு, அத்தகைய அன்பை வெளிப்படுத்த விரும்பு கிறீர்களா? அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள். எனக்கு ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கிப்பதை விட, ஒரு பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுவது சிறந்தது. நாம் ஒரு நிமிடம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 101 தேவனே, நான் அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெரிய, கொடூரமான மனிதர்கள், தேவபக்தியற்றவர்களும், அக்கறை யற்றவர்களுமாக இருந்தவர்கள், உண்மையான ஒன்றை அவர்கள் பார்த்ததால், ஒரு கணப் பொழுதில் இனிமையான, தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். தேவனே, இங்கே இருக்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும், சிறுவனும் அல்லது சிறுமியும், உண்மையான விசுவாசத்தைப் பெறக்கூடிய அந்த உண்மையான அனுபவத்தைப் பெறாதிருந்தால், இன்றிரவு அவர்கள் உம்மைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தைக் கொடுக்கிற பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அருள்புரிவீராக. 102 "நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர் களாயிருக்க," வேதம் சொல்லுகிறது, "நாம் ஆபிரகாமின் சந்ததியாயும், வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தரருமாயிருக்கிறோம்." கிறிஸ்து ஆபிரகாமின் சந்ததியாயிருந்தார், பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார், அவரோடுகூட மரித்தவர்களாய், அது நம்மை உறவுக்குள் கொண்டுவருகிறது, பரிசுத்த ஆவியின் மூலமாக, ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசத்தை நமக்குத் தருகிறது. தேவனே, இன்றிரவு நாங்கள் அந்த விசுவாசத்தையும், அந்த அன்பையும், அது ஏதோ... சபை அங்கத்துவத்தை விட கிறிஸ்து நமக்கு அதிகமாய் இருக்கிறார்; மதப் போர்வையின் பின்னால் ஒளிந்துகொள்வதை விட, அல்லது வேறெதையும் விட மேலானவர், பார்வையற்ற ஃபேன்னி கிராஸ்பி சொன்னது போல, "எனக்கு ஜீவனிலும் மேலானது." ஆண்டவரே, இந்த வேளையில் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இருதயங்களோடு பேசுவாராக. 103 நம் தலைகள் தாழ்த்தப் பட்டிருக்கும் போது, தேவன் உங்களை எங்கிருந்து எடுத்தாரோ அந்தத் தூசியை நோக்கி உங்கள் தலை தாழ்த்தப்பட்டிருக்கிறது, ஒருநாள் நீங்கள் அந்தத் தூசிக்குத் திரும்புவீர்கள்; இப்போது நீங்கள் எந்த வழியில் உங்கள் தலையைத் தாழ்த்தியிருக்கிறீர்களோ, பாவியாகிய என் நண்பரே, அல்லது பின்மாறிப்போனவரே, அல்லது அக்கறையற்ற, அனலற்ற சபை அங்கத்தினரே (எல்லாமே பாவம்தான்), அந்த மான் தன் இருதயத்தில் கொண்டிருந்த தாயன்பைப் போலவே, தேவனுடைய அன்பை உங்கள் இருதயத்தில் அவ்வளவு ஐசுவரியமாகப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கடைசி இதயத்துடிப்பு உங்கள் சரீரத்தை விட்டுப் பிரியும்போது நீங்கள் நிற்கவும், தூதர்கள் உங்கள் ஆத்துமாவை வீட்டிற்குக் கொண்டு செல்லும்படி இன்னும் அன்பான கரங்களுடன் யோர்தானுக்கு அப்புறம் பார்க்கவும் கூடிய, அதுபோன்ற ஒரு அனுபவத்தைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள், அது உங்கள் ஆத்துமா; அத்தகைய அன்பை உங்களுக்குத் தரக்கூடிய தேவன் இங்கே இருக்கிறார். 104 நீங்கள் அதை விரும்பினால், இந்தக் கட்டிடம் முழுவதும் உங்களுக்காக நான் ஜெபிக்கும்போது, அமைதியாக உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை, என் வலதுபுறம் மேல்தளத்தில் இருப்பவர்களையும் ஆசீர்வதிப்பாராக. 105 சகோதரிகளே, உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? பைபிள் சொல்லுகிறது, "ஸ்திரீயானவள் தன் பால் குடிக்கும் குழந்தையை மறப்பாளோ? ஆம், அவள் ஒருவேளை மறக்கலாம், ஆனால் நான் உன்னை மறப்பதில்லை; இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்." உங்கள் குழந்தையை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? தேவன் அதைவிட அதிகமாக உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை அப்படி நேசிக்கும்போது, இரக்கத்திற்கும் நியாயத் தீர்ப்புக்கும் இடைப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் நீங்கள் ஏன் நடக்க வேண்டும்? ஓ, ஆதாமின் விழுந்துபோன இனத்தின்மேல் பிதா வைத்த அன்பு எப்பேர்ப்பட்டது, தம்முடைய ஒரே பேறான குமாரன் பாடுபடவும், தம் கிருபையினால் நம்மை மீட்கவும் அவரைக் கொடுத்தார். 106 நமக்காக எப்பேர்ப்பட்ட அன்பை அவர் வெளிப்படுத்தினார் என்று பாருங்கள். அவருக்காகச் சிறிதளவு அன்பை உங்களால் வெளிப்படுத்த முடியாதா? அவ்வளவு அன்போடு உங்கள் கையை உயர்த்தி, "தேவனே, இதோ நான் இருக்கிறேன், என் இருதயம் உமக்கு முன்பாகச் சரியில்லை என்று நான் அறிவேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கையிடுகிறேன், ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில், அது தவறு என்று நான் அறிவேன், என்னிடம் வெறும் அறிக்கை மட்டுமே உள்ளது, என்னிடம் விசுவாசம் இல்லை. தேவனே, நீர் என்மேல் இரக்கமாயிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று சொல்வீர்களா? 107 உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கும் போதே... என் இடதுபுறம் மேல்தளத்தில் உள்ளவர்கள், உங்கள் கையை உயர்த்தி, "தேவனே, இரக்கமாயிரும்" என்று சொல்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக சகோதரியே, உங்களை, உங்களை, உங்களை, கீழே உள்ள அனைவரையும். பின்பக்க மேல்தளத்தில் உள்ளவர்கள், உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே உள்ள வாலிபர்களே, வாழ்க்கையின் திருப்புமுனையில் இருப்பவர்கள், இங்கே உள்ள சிறிய சகோதரிகளே, நீங்கள் மிகவும் ஆபத்தான நேரத்தில் இருக்கிறீர்கள். 108 நாளை இரவு நான் அதைக் குறித்துப் பேச விரும்புகிறேன். நீங்கள் சந்திப்பில் இருக்கிறீர்கள், மகளே. எனக்கும் வீட்டில் இரண்டு சிறிய பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். தேவன் இரக்கமாயிருப்பாராக, குழந்தாய்! ஏதோ ஒன்று சம்பவிப்பதற்கு முன்பாக இன்றிரவு இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள். இயேசு எதற்காக மரித்தாரோ அந்த உன்னுடைய விலையேறப் பெற்ற ஆத்துமா, நீ அவரை ஏற்றுக்கொள்ள மாட்டாயா? உன் கையை உயர்த்து. 109 சிறு பையன்களே, உங்கள் கைகளை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. கட்டிடத்தில் வேறு யாராவது, "சகோதரன் பிரான்ஹாம், என்னை நினைவு கூருங்கள்" என்று சொல்கிறீர்களா? கீழே உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக ஐயா. இங்கே உள்ள உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. பின்னால் வெகு தொலைவில் உள்ளவர்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. பக்கவாட்டில் நின்று கொண்டி ருப்பவர்கள், தேவனைத் தேவைப்படுகிற யாராவது, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும், நான் இப்போது இங்கே இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லி உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சிறியவரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. சரி, நாம் நம் தலைகளைத் தாழ்த்தியிருக்கலாம். 110 ஆண்டவரே, "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்" என்று உம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறீர். அப்படியானால், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பதின்மவயதினருமாக இன்றிரவு இங்கே அநேக கைகள் உயர்த்தப்பட்டிருக்கிறது, பிதா தம்முடைய மக்களை இழுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. "என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனைக் கொடுப்பேன்," என்று நீர் சொன்னீர், "அவர்கள் அழிந்துபோவதில்லை." 111 ஓ, உம்முடைய வார்த்தையை மேற்கோள் காட்ட நாங்கள் எவ்வளவு விரும்புகிறோம். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று நீர் சொன்னீர். அப்படியானால் அது எத்தகைய குணாதிசயமாக இருக்கும்? அநேகரிடம் அந்த அறிக்கை இருந்தும், அதைத் தொடரும் ஆவியின் கனிகள் இல்லாவிட்டால், அவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். "நீங்கள் உலகத் தையாவது உலகத்திலுள்ளவை களையாவது நேசித்தால், தேவனுடைய அன்பு உங்களில் இல்லை." 112 ஆண்டவரே, ஒவ்வொரு மனிதனும் தன் நிலையை அறிவான், இன்றிரவு ஒவ்வொரு நபரும், அவர்கள் கைகளை உயர்த்தியிருக் கிறார்கள், அவர்களில் சிலர், தாங்கள் தவறாக இருந்ததாகவும், தங்கள் இருதயத்தில் ஒரு உண்மையான அன்பை விரும்புவதாகவும் உயர்த்தினார்கள். இப்போது, பரிசுத்த ஆவியானவரே, அவர்கள் இங்கே வந்தாலும் அல்லது அங்கே அமர்ந்திருந்தாலும், அதைச் செய்ய உம்முடைய ஆவியானவர் தேவை. நீர் அவர்களுக்குப் போதுமான அளவு நெருக்கமாக இருந்தால், அவர்கள் கைகளை உயர்த்தும்படி நீர் செய்யத்தக்கதாக அவர்கள் இருதயம் இன்னும் மிருதுவாக இருந்தால், நீர் அவர்களுக்குள் வாசம் பண்ணுவது எவ்வளவு அதிகம்? அதைத் தந்தருளும், ஆண்டவரே. 113 இன்றிரவு இந்தச் செய்தியின் அன்பளிப்புகளாகவும், சிறிய அடையாளங் களாகவும் நான் அவர்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்கள் உம்முடைய ஆவியைப் பெற்றுக்கொண்டு, சற்று முன்பு நான் சொன்ன அந்தப் பழைய தாய் மானை விட மிகவும் உன்னதமான, மிகவும் உண்மையான அன்பை வெளிப்படுத்தி வாழ்வார்களாக. இதை நான் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 114 ஓ, வார்த்தை உங்களுக்குள் ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா? எத்தனை பேர் வார்த்தையை நேசிக்கிறீர்கள்? நிச்சயமாக. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." அந்த இசைக்குறிப்பு உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், நீங்கள் இப்போது எங்களுக்குத் தர முடியுமா... நான் ஒரு பாடகர் அல்ல, ஆனால் வார்த்தை வெளியே சென்ற பிறகு, நீங்கள் மிகவும் பயபக்தியுடன் இருந்ததால், பழங்காலப் பாடல்களில் அவரை ஆராதிக்க விரும்புகிறேன். அது மிகவும் இனிமையாக இருப்பதை நீங்கள் விரும்ப வில்லையா? "நான் அவரை நேசிக்கிறேன், அவர் முதலாவது என்னை நேசித்தபடியால் நான் அவரை நேசிக்கிறேன்" என்ற அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எங்கே... உங்கள் கைகளைப் பார்க்கிறேன். சரி, இசைக்குறிப்பைத் தாருங்கள். யாராவது இங்கே எனக்கு உதவ முடிந்தால், தயவுசெய்து வாருங்கள். சரி. சரி, இசைக்குறிப்பைத் தாருங்கள். நான் அவரை நேசிக்கிறேன்... நாம் பாடும்போது நம் கைகளை உயர்த்துவோமா. ...நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலாவது என்னை நேசித்தார், கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை சம்பாதித்தார். 115 ஓ, அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா? நாம் அதை மீண்டும் பாடுவோம், வாருங்கள், எல்லோரும், இப்போது உங்கள் இடத்திலேயே: நான்... அவரை அண்ணாந்து பார்த்து, அவரை விசுவாசியுங்கள். ...நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முதலாவது என்னை நேசித்தார், கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை சம்பாதித்தார். 116 ஓ தேவனே, ஓ, என்னுடைய ஆழத்திலிருந்து... [ஒலி நாடாவில் காலியிடம்]... ஓ கர்த்தாவே, உயர்த்தப்பட்ட இந்தக் கைகளின் ஆத்துமாக்களின் ஆழத்திலிருந்து, நாங்கள் உம்மை நேசிக்கிறோம் இயேசுவே, ஏனென்றால் நாங்கள் நேசிக்கப்படத் தகாதவர்களாய் இருந்த போது நீர் முதலாவது எங்களை நேசித்தீர். நீர் வந்து உம்முடைய இரத்தத்தினால் எங்களை மீட்டுக்கொண்டு, எங்கள் பாவங்களிலிருந்து எங்களைக் கழுவி, உம்முடைய சொந்த விலை யேறப்பெற்ற சரீரத்தின் இரத்தத்தினால் எங்களை வெண்மையாக்கி, தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரையிடப்படவும், தேவனுடைய குமா ரர்கள் என்றும் குமாரத்திகள் என்றும் அழைக்கப்படவும் பரிசுத்த ஆவியின் மூலமாக எங்களுக்குச் சிலாக்கியத்தைத் தந்திருக்கிறீர். முடிவில் நாம் என்னவாக இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை, ஆனால் அவருடைய மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாம் பெறுவோம் என்று அறிந்தி ருக்கிறோம், ஏனெனில் அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். 117 ஓ தேவனே, ஒருநாள் நீர் வரும் போதும், நித்திய ஜீவனை உடையவர்கள் பூமியின் தூசியிலிருந்து விழித்தெழும்போதும் சம்பவிக்கப்போவதை நினைக்கும்போது என் இருதயம் துள்ளுகிறது. ஜீவனை மறைக்கவே முடியாது. ஓ தேவனே, ஒரு பாறைக்கு அடியில் ஒரு சிறிய விதையை வைத்து, அதன் மேல் பாறையை வைத்தால், கதகதப்பான சூரியன் பூமியைத் தழுவத் தொடங்கும்போது, அந்தச் சிறிய ஜீவ அணு அந்தப் பாறையைச் சுற்றிக்கொண்டு மேலே வந்து தன் தலையை நீட்டும் என்று நான் நினைக்கிறேன். உங்களால் ஜீவனை மறைக்க முடியாது. நாம் கற்களுக்கு அடியிலும், சதுப்பு நிலங்களிலும், கடலின் ஆழத்திலும், அது எங்கிருந்தாலும் புதைக்கப் பட்டிருக்கலாம், ஆனால் தேவனுடைய குமாரன் வரும்போது, நித்தியத்தின் கதகதப்பான தென்றல் பூமியைத் தழுவத் தொடங்கும்போது, அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட பிள்ளைகள் தங்கள் தலையை உயர்த்தி தேவனுக்குத் துதி செலுத்துவார்கள். இதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனெனில் அது இப்போது எங்களுக்குள் வாழ்கிறது. 118 பரிசுத்தமுள்ள தேவனே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நாங்கள் உம்மை நேசிக்கிறோம், கேட்கக்கூடிய, காணக்கூடிய வழியில் நீர் இப்போது எங்கள் மத்தியில் வரும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்; எங்களுக்கு இது அவசியம் என்பதற்காக அல்ல ஆண்டவரே, ஆனால் உம்மை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களை உற்சாகப்படுத்தவும், வியாதியஸ்தர்கள் உம்மை விசுவாசிக்கும்படி உற்சாகப்படுத்தவும் இதைச் செய்யும். 119 பிலிப்பு, பேதுருவின் பெயர் என்னவென்று நீர் அவனிடம் சொன்னதைக் கேட்ட பிறகு, அவன் உம்மை விசுவாசித்தான் என்று நான் சொன்னது போல, இன்றிரவு இங்கே அநேகர் எதையும் பார்க்காமலே விசுவாசிக்கிறார்கள்; நாத்தான்வேல், அவன் யார் என்றும், அவன் எங்கிருந்து வந்தான் என்றும், அப்போஸ்தலன் அவனைக் கண்டுபிடித்தபோது அவன் எங்கே இருந்தான் என்றும் நீர் சொன்ன பிறகு, அவன் அதைக் கேட்டு விசுவாசித்தான்; அந்தப் பெண், அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லப்பட்ட பிறகு, அவள் அதற்குப் பிறகு விசுவாசித்தாள்; ஆனால் கர்த்தராகிய தேவனே, நாங்கள் எதையும் பார்ப்பதற்கு முன்பே விசுவாசிக்கிறோம். "அவர்களுடைய பலன் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" என்று நீர் சொன்னீர். 120 ஆனாலும், ஆண்டவரே, ஆரம்ப நாட்களில் நீர் செய்தது போலவே தம்மை வெளிப்படுத்த உமது வார்த்தையின்படி நீர் கடமைப்பட்டிருக்கிறீர். இது மரிக்கிற ஒரு புறஜாதி இனம், சபை தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது, வெளியே எடுக்கப் பட்டி ருக்கிறது, யுகங்கள் முழுவதிலும் அநேக ஆயிரக்கணக்கானோர் தூசியில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இது முடிவு காலம். கர்த்தராகிய இயேசுவே, வாரும், நாங்கள் ஆராதிக்கிற இந்தத் தேவன் ஒரு சரித்திர தேவன் அல்ல, அவர் நிகழ்கால தேவன், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும். துதி அனைத்தும் உமக்கே செலுத்தப்படுவதாக. ஆமென். 121 எனக்குத் தெரிந்தவரை, இது நமக்கு மூன்றாவது இரவு என்று நினைக்கிறேன், இது மூன்றாவது இரவு, வியாழன், வெள்ளி, அல்லது, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு. முதல் இரவு நாங்கள் ஜெப அட்டைகளைக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன், மக்களை வரிசையாக ஒவ்வொருவராக மேடைக்கு வரும்படி எண்களைச் சொல்லி அழைத்தோம். நேற்றிரவு ஒரு பெரிய அபிஷேகம் இருந்தது போல் தோன்றியது, நாங்கள் ஜெப அட்டைகளை வாங்கக்கூட இல்லை, பரிசுத்த ஆவியானவர் கட்டிடம் முழுவதும் சென்று, அவர்களை எப்படியும் அழைத்தார். 122 இன்றிரவு, நமக்குக் கொஞ்சம் நேரம் இருப்பதால், எட்டே முக்கால் ஆகிறது, நாம் கால் மணி நேரத்திற்குள் வெளியேறலாம்... பாருங்கள், என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் சரிதான், ஆனால் உலகிலுள்ள எல்லாப் பிரசங்கிமார்களும் பிரசங்கிக்கலாம், நாம் கேட்கலாம், ஆனால் இயேசுவிடமிருந்து வரும் ஒரே ஒரு வார்த்தை நாம் அனைவரும் சொல்வதை விட அர்த்தமுள்ளதாக இருக்கும். பாருங்கள், "ஓ, ஆம், அது வேறொரு நாளில் நடந்தது" என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர் அப்பொழுது எப்படி இருந்தாரோ, அப்படியே இன்றும் இங்கே இருக்கிறார். 123 இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் இதற்கு முன் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டதில்லை? உங்கள் கைகளைப் பார்க்கிறேன். அதிகம் பேர் இல்லை, அது நல்லது. கூட்டம் தன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. மக்கள் ஒரு இரவு வந்து நிரப்பிவிட்டு, திரும்பிச் சென்று, "ஓ, அது எனக்குப் போதும்" என்று சொல்வதை நான் விரும்புவதில்லை. ஏதோ தவறு இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. புரிகிறதா? ஓ, நான் நேற்று முந்தின நாள் ஒரு பிஸ்கட்டைச் சாப்பிட்டேன் என்றால், அது சரியாக இருக்கலாம், ஆனால் அவ்வப்போது எனக்கு ஒன்று தேவை. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." 124 முதல்முறையாக இங்கு வந்திருப் பவர்களே, நான் ஒரு சுகமளிப்பவன் என்று உரிமை கொண்டாடவில்லை, என் அன்பு நண்பரே, வேறெவரும் சுகமளிப்பவர் அல்ல, தேவனே சுகமளிப்பவர். இயேசு கல்வாரியில் பலியானபோது, தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காகச் செய்த ஒன்றுதான் தெய்வீக சுகம் என்று நான் விசுவாசிக்கிறேன். 125 இது என் நினைவுக்கு வருகிறது, நான் அதைச் சொல்ல வேண்டும். சார்லஸ் ஃபுல்லர் (Charles Fuller) மற்றும் ஸ்டூவர்ட் ஹாம்ப்லன் (Stuart Hamblen) போன்ற அநேகர் தங்கள் படங்களை எடுக்கச் சென்றிருந்த ஒரு ஸ்டூடியோவில் சில காலத்திற்கு முன்பு நானும் இருந்தேன், நானும் அதே ஸ்டூடியோவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். எனவே அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பழமைவாதப் பள்ளியிலிருந்து (fundamental school) அப்போதுதான் வெளியே வந்திருந்தான், அவனுக்கு நிச்சயமாகக் கல்வி இருந்தது, அவன் என் மேலாளரிடம், "திரு. பிரான்ஹாம் அவர்களை நீங்கள் இங்கே விட்டுச்செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றான். நான் திரும்பிப் பார்த்தேன், ஏனென்றால் நான் காலை உணவுகளுக்குச் செல்லும்போது அவர்கள் அந்தப் பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள், அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் மேலாளருக்குப் பக்கத்தில் உட்காருவேன், அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாவிட்டால், நான் என் முழங்காலால் அவரை இடிப்பேன், அங்கிருந்து அவர் பேசுவார். எனவே அவன், "திரு. பிரான்ஹாம் அவர்களை நீங்கள் இங்கே விட்டுச்செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றான். அவன் என்னைக் கேள்விக்குள்ளாக்கப் போகிறான் என்று எனக்குள் ஏதோ ஒன்று சொன்னது. கடைசியாக, திரு. பாக்ஸ்டர் (Mr. Baxter), "சரி, ஆனால் முப்பது நிமிடங்களில் அவரை அங்கே அழைத்து வாருங்கள்" என்றார். 126 அவன், "நான் சில பக்கவாட்டுக் காட்சிகளை எடுக்க விரும்புகிறேன்" என்றான். அது முற்றிலும் சரியல்ல என்று எனக்குத் தெரியும். எனவே அவர் வெளியேறிய உடனே, அவன், "திரு. பிரான்ஹாம், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஒரு மனிதனாக நான் உங்களை மதிக்கிறேன், ஆனால் உங்கள் இறையியல் தவறானது" என்றான். நான், "அதில் என்ன தவறு, ஐயா?" என்றேன். அவன், "சரி, முதலாவது," அவன், "பாவநிவாரணத்தின் மூலம் தெய்வீக சுகத்தைப் போதிக்கிறீர்களா?" என்றான். நான், "மீட்பின் ஆசீர்வாதம் ஒவ்வொன்றும் பாவநிவாரணத்திலிருந்து வருகிறது" என்றேன். "சரி," அவன் சொன்னான், "திரு. பிரான்ஹாம், பாவநிவாரணத்தில் தெய்வீக சுகம் இருந்திருந்தால், வலி என்று ஒன்றே இருந்திருக்காது." நான், "ஆத்தும இரட்சிப்பு பாவ நிவாரணத்தில் இருக்கிறதா, ஐயா?" என்றேன். அவன், "ஆம்" என்றான். நான், "சோதனை இருக்கிறதா?" என்றேன். "நிச்சயமாக." நான், "அப்படியானால் வலி இருக்கிறது" என்றேன். 127 அவன் சில பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினான், நான், "நான் நீண்ட காலமாக பெந்தெகொஸ்தே மக்கள் மத்தியில் இருந்திருக்கிறேன், ஆனால் வியாக்கியானம் பண்ணும் வரத்தை நான் ஒருபோதும் பெறவில்லை, என்னிடம் கிங் ஜேம்ஸ் (King James) மொழியில் பேசுங்கள்" என்றேன். நான், "நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்னிடம் வேறொரு மொழியில் பேசுகிறீர்கள், ஐயா. நான் ஒரு மலைக் கிராமத்தான், ஆனால் எனக்குக் கர்த்தராகிய இயேசுவைத் தெரியும். எனக்குப் புத்தகத்தை நன்றாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆசிரியரை எனக்குத் தெரியும்" என்றேன். மேலும் நான், "வெறும் எளிய வார்த்தைகளில் என்னிடம் பேசுங்கள்" என்றேன். அவன், "ஏசாயா அங்கே சொன்னாரே, அந்த பாவநிவாரணத்தில் தெய்வீக சுகத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?" என்றான். "ஆம்." நான், "ஆம், ஐயா, அதுதான் சரியாக இருக்கிறது" என்றேன். அவன், "திரு. பிரான்ஹாம், நீங்கள் ஒரு மனசாட்சியுள்ள மனிதர் என்று நான் நம்புகிறேன். அது நீக்கப்பட்டுவிட்டது என்று நான் பைபிள் மூலம் உங்களுக்கு நிரூபித்தால், அதை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஒரு ஆணாகவும், கனவானாகவும் இருப்பீர்களா?" என்றான். நான், "நிச்சயமாக, நான் நிச்சயமாகச் செய்வேன்" என்றேன். அவன், "மத்தேயு 8-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன், அவர்கள் பிணியாளிகள் மற்றும் வியாதியஸ்தர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள், 'அவர்தாமே நம்முடைய பலவீ னங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்' என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறை வேறும் படி அவர் அவர்களைச் சுகமாக்கினார்" என்றான். நான், "அப்படியானால் ஏசாயா பேசிக் கொண்டிருந்த பாவநிவாரணம் அங்கே நிறைவேறிவிட்டது என்கிறீர்களா?" என்றேன். அவன், "நிச்சயமாக" என்றான். 128 நான், "அப்படியானால் வாசலில் இருந்த மனிதனும், மற்றவர்களும் யாரால் சுகமாக்கப்பட்டார்கள்?" என்றேன். நான், "ஐயா, அது பாவநிவாரணம் செய்யப்படுவதற்கு ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது, அப்படியானால் பாவநிவாரணம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அதற்கு அதிக வல்லமை இருந்தது, நடைமுறைக்கு வந்த பிறகு குறைந்த வல்லமைதான் இருக்கிறது" என்றேன். 129 பிறகு அவன் மீண்டும் தன் பெரிய வார்த்தைகளுக்குச் சென்றான். நான், "ஒரு நிமிடம்" என்றேன். நான் இப்போது பயன்படுத்திய இந்த வேதவசனத்தை எடுத்தேன், "நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்." நான், "'எவைகள்' என்பதில் தெய்வீக சுகம் உள்ளடங்கியிருக்கிறதா?" என்றேன். அவன், "சரி, 'எவைகள்'..." நான் சொன்னேன்... அவன், "அது தெய்வீக சுகம் அல்ல" என்றான். 130 நான், "ஆனால் இயேசு, 'எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ' (Whatsoever things) என்றார். நீங்கள், 'இதைத் தவிர்த்து' என்கிறீர்கள், ஆனால் இயேசு, 'எவைகள்' என்றார். இப்போது, யார் சொல்வது சரி, நீங்களா அல்லது அவரா? 'எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்யென்று இருக்கட்டும், என்னுடையதே மெய்' என்று அவர் சொன்னார். யார் சொல்வது சரி?" என்றேன். நான், "ஐயா, அது வார்த்தையில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்களா?" என்றேன். அவன் அங்கே மாட்டிக்கொண்டான். அவன், "அது வார்த்தையில் இருந்தது, ஆனால் பாவநிவாரணத்தில் இல்லை" என்றான். ஓ, அப்படியானால், அவன் தவறான ஒன்றைச் சொல்லிவிட்டான். 131 "பசுவுக்குப் போதுமான கயிறு கொடுத்தால் அது தானாகவே கழுத்தை நெரித்துக்கொள்ளும்" என்ற பழைய பழமொழி உங்களுக்குத் தெரியுமா? அது நடக்கும். அது ஒரு டெக்சாஸ் வாசகம், ஆனால் அது உண்மை. 132 நான், "அப்படியே நில்லுங்கள்" என்றேன். நான் சொன்னேன்: "ஒருமுறை ஒரு ராஜா இருந்தார், அவர் ஒரு நீதியுள்ள மனிதர், நேர்மையானவர், அவர் தன் வார்த்தையைக் காப்பாற்றினார், அவர் ஒரு நேர்மையான மனிதர், அவர் தன் ராஜ்யத்தின் சட்டங்களை உருவாக்கினார். ஒருநாள் ஓர் அடிமை ஒரு குற்றம் செய்தான், அவன் ராஜாவின் நீதிக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டான், ராஜா அவனுக்கான தண்டனைகளை வாசித்தார், அந்தப் பாவத்திற்கு மன்னிப்பு இல்லை, அந்த மனிதன் சாக வேண்டும்." 133 "அவர், 'ஐயா, இந்தப் பாவத்திற்கு எங்களிடம் மன்னிப்பு இல்லை, நீ சாக வேண்டும், மரணதண்டனை மேடையில் உன் தலை வெட்டப்பட வேண்டும்' என்றார். அவன் நடுங்கத் தொடங்கினான். அவர், 'ஒரு நிமிடம் இரு, நிமிர்ந்து நில்' என்றார். அவர், 'உன் தலையை வெட்டுவதற்கு முன், அல்லது அதைச் செய்து முடிப்பதற்கு முன் நான் உனக்கு என்ன செய்ய முடியும்?' என்றார். "அவன், 'எனக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்கள்' என்றான். அவனால் அதைப் பிடிக்க முடியவில்லை, அவன் தலை வெட்டப்படப் போகிறது, அவனால் அதைப் பிடிக்கவே முடியவில்லை. "ராஜா, 'ஒரு நிமிடம் இரு, நிமிர்ந்து நில். நீ தண்ணீரை குடிக்கும் வரை நான் உன் தலையை வெட்டப் போவதில்லை' என்றார். அந்த அடிமை அதைத் தரையில் ஊற்றினான்." நான், "அவர் ஒரு நீதியுள்ள மனிதர், அவர் தன் வார்த்தையைக் காப்பாற்றுகிறார், அந்த மனிதன் சாக வேண்டும் என்று அவருடைய பரிகாரம் (atonement) சொல்லுகிறது, அவரால் அவருடைய வார்த்தையைக் காப்பாற்ற முடியவில்லை" என்றேன். "ஓ," அவன், "அது ராஜாவின் சறுக்கல்" என்றான். 134 நான், "அப்படியானால் பாவ நிவாரணத்தில் அதை அனுமதிக்காமல், அதைத் தம்முடைய வார்த்தையில் வைப்பதற்கு தேவன் ஒரு சறுக்கலைச் செய்தார். போய்விடுங்கள், சகோதரரே" என்றேன். நான், "பட்டினியால் செத்த கோழியின் நிழலால் செய்யப்பட்ட குழம்பை விட உங்கள் வாதம் மெலிதாக இருக்கிறது, அதை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்றேன். ஆம் ஐயா, அதுதான் விஷயம். 135 இயேசு மரித்தபோது தேவன் மீட்பின் ஆசீர்வாதம் ஒவ்வொன்றையும் பாவ நிவாரணத்தில் வைத்திருக்கிறார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்." நீங்கள் நோக்கிப் பார்த்து பிழைப்பதே உங்களுக்கானது; அது நீங்கள்தான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 136 ஒரு பிரசங்கியார், கைகளை வைப்பதன் மூலம் தெய்வீக சுகத்தைப் பிரசங்கிப்பவராக இங்கே வந்தால், அவர் வார்த்தையிலிருந்து அதை உங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும். அவர் கைகளை வைப்பது ஞானஸ்நானத்தைப் போலவே, அல்லது வேறெதாவதைப் போலவே, வேறொன்றுமில்லை, உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால், நீங்கள் ஒரு காய்ந்த பாவியாகக் கீழே போய், ஈரம் சொட்டும் பாவியாக மேலே வருவீர்கள். உங்கள் இருதயம் மாறாவிட்டால் நீங்கள் இன்னும் பாவிதான். உள்ளான கிருபையின் கிரியை ஒன்று நடந்திருக்கிறது என்பதற்கான வெளிப்புற வெளிப்பாடு தான் ஞானஸ்நானம். பிரசங்கி மார்கள் எத்தனை முறை உங்கள்மேல் கைகளை வைத்தாலும், அவர்கள் இதை எவ்வளவு செய்தாலும், நீங்கள் அதை உண்மையில் விசுவாசிக்கும் வரை அது ஒரு பொருட்டல்ல. 137 பிறகு, இயேசு பூமியில் இருந்தபோது, தாம் மேசியா என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக ஒரு சிறிய அடையாளத்தைச் செய்தார், அவர்கள் அதை விசுவாசித்தார்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்; அவர் அப்படியே இருக்கிறார். நாம் இப்போது இந்த யுகத்தை, புறஜாதி யுகத்தை முடித்துக் கொண்டிருக்கிறோம், ஸ்புட்னிக்ஸ் (sputniks) வெடிப்பதற்கு முன்பாக, மக்களையும், எஞ்சிய மக்களையும், புறஜாதிகளையும், தமது நாமத்திற்காக வெளியே எடுப்பதற்காக இயேசு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்திருக்கிறார். 138 சரி, ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது, நாம் இன்னொரு வார்த்தை ஜெபம் கேட்போம். நாம் ஜெப அட்டைகளை அழைப்போம். முந்தின இரவு நாங்கள் அவற்றைப் பயன்படுத்தினோம், நேற்றிரவு பயன்படுத்தவில்லை, இன்றிரவு நாம் ஜெப அட்டைகளை அழைப்போம். பில்லி எங்கே? அந்த அட்டைகள் எங்கே இருக்கின்றன, அவர் என்ன கொடுத்தார், எத்தனை கொடுத்தார் என்று அவரிடம் கேளுங்கள். X, ஒன்று முதல் நூறு வரை. 139 ஆண்டவரே, நீர் யேகோவா, இங்கே நூறு ஜெப அட்டைகள் உள்ளன, அவர்கள் அனைவரும் வியாதியஸ்தர்கள், ஆண்டவரே, இல்லையென்றால் அவர்கள் அட்டையை வைத்திருக்க மாட்டார்கள். எங்கே தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உமக்குத் தெரியும், எனக்கு உதவும், தேவனே. மக்களை ஆசீர்வதியும். சபையில் உள்ளவர் களோடு பேசும், நம்முடைய பலவீனங்களை உணருகிறவராயிருக்கிற அந்தப் பிரதான ஆசாரியராகிய அதே இயேசு, அந்தப் பெண் தொட்டவர், இன்றும் அப்படியே இருக்கிறார் என்பதையும், அவர் எப்போதுமிருந்தபடியே இன்றும் செயல்படுகிறார் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். இன்றிரவு நாங்கள் உம்மைக் காணும்படிச் செய்யும். 140 எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியடையும் போது, எம்மாவுவிலிருந்து (Emmaus) வந்தவர் களைப் போல நாங்களும் உணருவோம். நீர் அவர்களை உள்ளே வைத்துப் பூட்டி, நீர் அவர்களுடன் உள்ளே இருந்தபோது, உமது சிலுவை மரணத்திற்கு முன் நீர் செய்தபடியே ஏதோ ஒன்றைச் செய்தீர், அவர் அதே விதமாகச் செயல்பட்டதால், அது அதே இயேசுதான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் கிறிஸ்து தான் என்பதைக் காட்டுவதற்கு முதலாவது அவர் நேராக வார்த்தைக்குச் சென்றார், பின்பு தாம் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் காட்டுவதற்கு அவர் ஏதோ ஒன்றைச் செய்தார். அவர்கள் ஓடிச்சென்று, "மெய்யாகவே அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" என்றார்கள். 141 அதே காரியங்களை இன்றிரவு அருளும். உமது சிலுவை மரணத்திற்கு முன் நீர் செய்ததாக நாங்கள் பேசிக்கொண்ட அதே காரியங்களை இன்றிரவு செய்யும், அதன் மூலமும், இங்கே இருக்கிற மக்கள் மூலமும், நீர் இன்னும் உயிரோடிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம். சபை தம்மைத் தாழ்த்தட்டும், உமது ஊழியனாகிய என்னுடனே கூட, உமது நாமத்திற்கு மகிமை சேர்க்கவும், பலவீனரின் இருதயத்தைப் பலப்படுத்தவும், பாவியை இரட்சிக்கவும், சோர்ந்து போனவர்களுக்கு விசுவாசத்தைக் கொண்டு வரவும் இன்றிரவு எங்கள் மூலமாக நீர் செயல்படும்படி நாங்கள் எங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். நாங்கள் எங்கே அழைத்தோம்? முதல் பகுதி, நாம் ஒன்றாம் எண்ணை அழைத்தோம், இல்லையா? நாம் எண்ணிலிருந்து அழைக்க வில்லையா...? [ஒலி நாடாவில் காலியிடம்] 142 ...அவர் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரை சுற்றிலும் பார்த்தார். அவளுடைய நிலைமை சுகமாக்கப்பட்டது என்றும், அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்றும் அவர் அவளிடத்தில் சொன்னார். அது சரியா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும், அவர் நம்முடைய பலவீனங்களை உணருகிறவ ராயிருக்கிற ஒரு பிரதான ஆசாரியராக இப்போதும் இருக்கிறார் என்றும் பைபிள் சொல்லுகிறது, இது புதிதாக வந்தவர்களுக்காக. அது சரியா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத பிரதான ஆசாரியராக இருந்தால், அவர் எப்படிச் செயல்படுவார்? அவர் அதே வழியில்தான் செயல்பட வேண்டும். அது சரியா? அப்படியானால் அவரை நோக்கிப் பார்த்து, விசுவாசித்து, பாருங்கள். 143 "கர்த்தராகிய தேவனே, சகோதரன் பிரான்ஹாமிற்கு என்னைத் தெரியாது, என்னைப் பற்றி அவருக்கு ஒரு யோசனையும் இல்லை, ஆனால் ஆண்டவரே, நீர் என்னை அறிவீர், ஆகையால் நீர் எனக்கு உதவும், நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடவும், அந்தப் பெண்ணுக்கு நீர் செய்தது போலவே, சகோதரன் பிரான்ஹாம் மூலமாகப் பேசுவதன் மூலம் அதை எனக்கு உறுதிப்படுத்தவும் செய்யும்" என்று உங்கள் இருதயத்தில் சொல்லுங்கள். அவர் பிரதான ஆசாரியரா என்று பாருங்கள். அதை விசுவாசிக்க நான் உங்கள் விசுவாசத்திற்குச் சவால் விடுகிறேன்! 144 இப்போது, கர்த்தருக்குச் சித்தமானால், புதன் இரவு நான் பிரசங்கிக்காமல் மேடைக்கு வரப்போகிறேன், சகோதரன் வேய்ல் (Vayle), அல்லது யாராவது ஒருவர் பேசுவார்கள், அப்போது நாம்... கூட்டத்தில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள், அது... பிரசங்கிப்பது என்பது ஒரு அபிஷேகத்தின் கீழ் நடப்பது, இது ஒரு தீர்க்கதரிசன வரம், முற்றிலும் மாறுபட்ட ஒன்று, ஒரே ஆவிதான், ஆனால் வித்தியாசமான அபிஷேகம். பாருங்கள், பிரசங்கிக்கும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப் படுகிறீர்கள், நீங்கள் கொடுக்கிறீர்கள், நீங்கள் அதை விரும்புகிறீர்கள், நான் இரவு முழுவதும் அதைச் செய்ய முடியும்; ஆனால் ஒரு தரிசனம் எட்டு மணிநேர பிரசங்கத்தை விட அதிகமான பலத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும். வேதத்தின் மூலம் எத்தனை பேர் அதைப் புரிந்துகொள்கிறீர்கள்? நிச்சயமாக. இயேசுவை, ஒரே ஒரு பெண் தொட்டாள், தேவனுடைய குமாரனாகிய அவர் பலவீனமானார்; தானியேல் ஒரு தரிசனத்தைக் கண்டார், அநேக நாட்கள் அவர் தன் தலையில் கலக்கமடைந்தார். அது நினைவிருக்கிறதா? நிச்சயமாக. 145 இப்போது, எனக்குத் தெரிந்தவரை, இங்கே நாடாக்களைப் பதிவு செய்யும் திரு. கோட் (Mr. Goad), இங்கே இருக்கும் திரு. வேய்ல், என் மகன், அங்கே நிற்கும் திரு. ஸ்வீட் (Mr. Sweet), அங்கே இருக்கும் சகோதரர்கள் ஆகியோரைத் தவிர, எனக்கு முன்னால் இருக்கிற ஒருவரையும் எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு முன்னால், மேல்தளத்திலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ளவர்கள், எனக்கு அறிமுகமில்லாதவர்கள் அனைவரும், எல்லா இடங்களிலும் உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி. ஆனால் நீங்கள் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பே தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? 146 வரங்களும் அழைப்புகளும் மாறாதவை களாயிருக்கின்றன என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? சபையில் ஐந்து வரங்கள் இருப்பதாக பைபிள் சொல்லுகிறது, "தேவன் சபையிலே அப்போஸ்தலர்களையும்," அல்லது மிஷனரிகளையும், "அப்போஸ்தலர்கள், தீர்க்க தரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மேய்ப் பர்களை ஏற்படுத்தியிருக்கிறார்." உண்மை. அப்போஸ்தலன் இருந்தால், தீர்க்கதரிசி இருக்கிறார்; தீர்க்கதரிசி இருந்தால், போதகர் இருக்கிறார்; போதகர் இருந்தால், மேய்ப்பர் அல்லது சுவிசேஷகர் இருக்கிறார். பாருங்கள்? மேய்ப்பரும் சுவிசேஷகரும் இருக்கிறார்கள், ஆனால் தீர்க்கதரிசியோ அல்லது அப்போஸ் தலனோ இல்லை என்று நீங்கள் சும்மா சொல்ல முடியாது. தேவன் இன்னும் ஏற்படுத்துகிறார்... அவரிடம் அவருடைய சபை இருக்கும் வரைக்கும், அவர் இன்னும் தம்முடைய சபையை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார். நிச்சயமாக. 147 இப்போது, அந்த வரங்களுக்காக நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் கைகளை வைப்பதில்லை, "தேவன் சபையில் ஏற்படுத்தியிருக்கிறார்." ஏதேன் தோட்டம் முதல் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருந்தார், ஸ்திரீயின் வித்து என்று முன்னறிவிக்கப்பட்டார். யோவான் ஸ்நானகன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வனாந்தரத்தில் கூப்பிடு கிறவனுடைய சத்தமாயிருந்தான், "வனாந்த ரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்." அது எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக. "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே உன்னை அறிந்தேன்; உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்" என்று எரேமியா 1:4 சொல்வது எத்தனை பேருக்குத் தெரியும்? வரங்களும் அழைப்புகளும் யாரோ ஒருவர் செய்ததினால் வருவதல்ல, அது தேவன் செய்தது. அவர்கள் பிறக்கிறார்கள், அதளுடனே வளர்க்கப்படுகிறார்கள், அது தேவன் செய்தது. 148 இப்போது, அவர் நம்மில் சிலரைப் பிரசங்கிக்கவும், சிலரைப் போதிக்கவும், சிலரை வித்தியாசமான செயல்பாட்டு ஆவிகளோடும் அழைக்கிறார். இப்போது, உள்ளூர் சபையில் பன்னிரண்டு, அல்லது, ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் உள்ளன. பாருங்கள்? இப்போது, தீர்க்கதரிசன வரம் இருக்கிறது, அது இன்றிரவு இங்கிருக்கும் எந்த நபர் மீதும் இருக்கலாம், ஒருவேளை மீண்டும் அவர்கள் மீது வராமல் போகலாம், அது வந்து போகக்கூடியது. தீர்க்கதரிசன ஆவிக்கும் ஒரு தீர்க்கதரிசிக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. தீர்க்கதரிசன ஆவி சபைக்குக் கொடுக்கப் படுவதற்கு முன்பாக, பகுத்துணரும் தன்மையுள்ள இரண்டு அல்லது மூன்று பேரால் நிதானிக்கப்பட வேண்டும். பழைய தீர்க்கதரிசிகள் நின்றபோது, ஏசாயாவும் எரேமியாவும், அவர்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது' என்கிற செய்தி இருந்தது, அவர்கள் தொட்டிலிலிருந்தே அப்படியே பிறந்தவர்கள். 149 மேய்ப்பர்கள், போதகர்கள், ஏதோ ஒரு வேதப்பள்ளி (seminary) உங்களை வரிசைப் படுத்துவது அல்ல, ஆனால் ஒரு மேய்ப் பராகவோ அல்லது போதகராகவோ தேவன் உங்களை எங்கே நிறுத்துகிறாரோ, அதுதான் வித்தியாசம். வேதப்பள்ளிகள் உங்களை அனுப்பியிருந்தால் நீங்கள் பணத்திற்காக வெளியே சென்றிருக்கலாம்; நீங்கள் தேவனுக்காகச் சென்றீர்கள், சபையின் நன்மைக் காகவும் தேவனுடைய மகிமைக்காகவும் சென்றீர்கள், நீங்கள் வாய்க்கால் தண்ணீரைக் குடித்து சோடா பிஸ்கட்டுகளைச் சாப்பிட வேண்டியிருந்தாலும், அது உங்களுக்கு ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, நீங்கள் அப்படியே பிரசங்கித்தீர்கள். விமர்சிக்கப் பட்டாலும் அல்லது விமர்சிக்கப்படா விட்டாலும், பிரபலமாக இருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை, நீங்கள் எப்படியும் செல்கிறீர்கள். அந்த மனிதர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. 150 அவர்களில் அநேகர் இன்றிரவு இங்கே அமர்ந்திருக்கிறார்கள், போர்வீரர்கள், நான் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சாலையை அவர்கள்தான் இலவசமாகப் போட்டுக்கொடுத்தார்கள். நீங்கள் தெரு முனைகளில் நின்று பிரசங்கித்தீர்கள், தீர்க்கதரிசனம் உரைத்தீர்கள், இது வருகிறது என்று சொன்னீர்கள், இதோ அது வந்துவிட்டது. சகோதரர்களே, நீங்கள்தான் அந்தச் சாலையை அமைத்தவர்கள். வெகுமதிகள் வழங்கப்படும் வரை காத்திருங்கள், யார் வெகுமதிகளைப் பெறுகிறார்கள் என்று பாருங்கள், அது நீங்கள்தான். ஆம், ஐயா. இந்தக் கடைசி நாட்களில் சபைக்கான அஸ்திபாரங்களைப் போட்டது நீங்கள்தான். இப்போது தேவன் நீங்கள் போட்ட அந்த அஸ்திபாரத்தின் மேல் நகரத் தொடங்கியிருக்கிறார். அது எவ்வளவு அற்புதமானது! "என் தேவனே, நீர் எவ்வளவு பெரியவர், நீர் எவ்வளவு பெரியவர்" என்ற அந்தப் பாடலை நான் நேசிக்கிறேன். 151 இதுதான் முதல் பெண்ணா? சரி, இப்போது நான் உங்கள் முழு கவனத்தையும் சில நிமிடங்களுக்குக் கேட்கிறேன். இப்போது, யாரும் நடமாட வேண்டாம், மிகவும் அமைதியாக அமருங்கள், பயபக்தியுடன் இருங்கள். இப்போது இங்கே, நான் செய்த எல்லாப் பிரசங்கங்களும் மற்றவைகளும், அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இன்றும் இருக்கிறார் என்று இந்த பைபிள் அறிவிக்கிறது. இப்போது, அது அப்படி இல்லையென்றால், அந்த பைபிளினால் என்ன பயன்? அது அப்படி என்றால், நாம் அதைத் தழுவிக்கொண்டு அதனுடனே மரிப்போம், ஏனெனில் அவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவர் தேவனாக இருந்தால், அவர் தம் வாக்குத் தத்தத்தைக் காப்பாற்றுவார்; அவர் தம் வாக்குத்தத்தத்தைக் காப்பாற்றவில்லை என்றால், அவர் தேவன் இல்லை. எனவே அவர் தேவன் என்று எனக்குத் தெரியும். இப்போது, இங்கேதான் நான் நிற்கிறேன்: ஒரு தெய்வீக வரத்தின் மூலமாக அவரைப் பிரதிநிதித்துவப் படுத்த, அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நிற்கிறேன்; என்னைப் பிரதிநிதித்துவப்படுத்த அல்ல, இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. 152 நான் சொல்வதை நீங்கள் விசுவாசிக் கவில்லை என்றால், நான் இங்கே மணிக் கணக்காக நிற்கலாம், ஒன்றும் நடக்காது. அதைச் செய்வது நீங்கள்தான், நான் அல்ல, அது உங்களுடைய சொந்த விசுவாசம். 153 "நீங்கள் ஏன் மக்களை இங்கே மேலே கொண்டுவருகிறீர்கள்?" 154 சரி, இந்த வழியில் எனக்கு ஒரு நபர் தனித்துத் தெரிகிறார். நேற்றிரவு ஒரு பெரிய கூட்டம் இருந்தது, நூற்றுக்கணக்கானோர் கிறிஸ்துவிடம் வந்தார்கள். அப்போது கூட்டத்தில் அப்படி ஒரு வெடிப்பு ஏற்பட்டது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தரிசனங்கள் கூட்டத்தின் மேல் வெளிப்படத் தொடங்கின. பாருங்கள்? ஆனால் இன்றிரவு இங்கே... நான் நேற்றிரவு அந்தக் கூட்டத்தை அலசிப் பார்த்தேன், இன்றிரவு நமக்கு அதிகம் பேர் கிடைக்கவில்லை. எனவே கொஞ்சம் சோர்வாக இருந்ததால், ஒரு நபர் இங்கே நிற்பதற்காக நான் ஜெப வரிசையை அழைத்தேன், அப்போதுதான் அபிஷேகம் முதலில் தொடங்கும், பிறகு அது அங்கிருந்து வெளியே செல்லும். பாருங்கள்? முதலாவது, அது மேடையில் உள்ள ஒருவரைத் தாண்டி, அங்கே பின்னால் வெகு தொலைவில் உள்ள மேல்தளத்திற்குச் சென்று அவர்களைப் பிடிக்கும். எத்தனை பேர் அது நடப்பதைப் பார்த்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. தேவனே, நீர் மக்களிடமிருந்து அப்படியே வெளியே நகருகிறீர். இங்கே மேடையில் நிற்கும் மக்கள் சுகமடைவதில்லை, அங்கே வெளியே இருப்பவர்கள் சுகமடைகிறார்கள். நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 155 நான் இங்கே ஒரு பெண்ணைச் சந்திக்கிறேன். இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. அவள் ஒரு மாயக்காரியாக இருக்கலாம், அவள் ஒரு இறைமறுப்பாளராக இருக்கலாம், அவள் ஒரு ஏமாற்றுக்காரியாக இருக்கலாம், அவள் யாரென்று எனக்குத் தெரியாது, அவள் ஒரு பரிசுத்தவானாக இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் இது கிணற்றடியில் நடந்ததைப் போன்ற ஒரு படம், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்நாளில் முதல்முறையாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். நாம் சந்திப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். அது சரியா? 156 இப்போது, கர்த்தராகிய இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், ஆப்பிரிக்காவில் அவர் எனக்குக் கொடுத்த இந்த உடையை அணிந்துகொண்டு அவர் இங்கே நின்றிருந்தால், இந்த உடையை அணிந்துகொண்டு அவர் இங்கே நிற்கும்போது, அந்தப் பெண், "நான் வியாதியாக இருக்கிறேன். ஆண்டவரே, என்னைச் சுகமாக்குவீரா?" என்று சொன்னால், நான் இப்போது உங்களிடம் கேட்க விரும்புகிறேன், கவனமாக இருங்கள்: அவரால் அவளைச் சுகமாக்க முடியுமா? இல்லை, ஐயா. அவர் ஏற்கனவே செய்து முடித்த ஒன்றை அவரால் செய்ய முடியாது. பாருங்கள்? அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். அவள், "நான் ஒரு பாவி, என்னை இரட்சியும்" என்று சொன்னால், அவர், "நான் ஏற்கனவே அதைச் செய்துவிட்டேன், நீ அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறாயா?" என்று சொல்வார். அது சரியா? நீங்கள் அவரை உங்கள் சொந்த இரட்சகராக, விடுதலையாளராக ஏற்றுக் கொள்ளும் போது! 157 இப்போது, தேவனுடைய ஊழியனாக நான் அந்தப் பெண்ணிடம், "அம்மா, நீங்கள் வியாதியாக இருக்கிறீர்கள். நான் உங்கள்மேல் என் கைகளை வைக்கிறேன், நீங்கள் குணமாகப் போகிறீர்கள்" என்று சொன்னால், அது உண்மையாக இருக்கலாம்; அவளால் அதைக்குறித்து யோசிக்க முடியும். 158 அவள், "ஆம், சகோதரன் பிரான்ஹாம் ஒரு நல்ல மனிதராக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன், ஆனால் அது சகோதரன் பிரான்ஹாம்" என்று சொல்வாள். ஆனால் இப்போது, இங்கே ஏதோ ஒன்று சம்பவித்து, அது அவளுடைய வாழ்க்கையின் பின்னோக்கிச் சென்று, எனக்குத் தெரியாத அவளுடைய காரணத்தை இங்கே வெளியே கொண்டுவந்து சொன்னால் என்ன? அப்போது அது சகோதரன் பிரான்ஹாமை விட மேலானது. அது சரியா? அதற்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட நபர் தேவை. 159 பரிசேயர்கள், "அது பெயல்செபூல்" என்றார்கள். 160 உண்மையான விசுவாசி, "இவர் தேவனுடைய குமாரன்" என்றான். இது தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 161 இப்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தேவனுடைய மகிமைக்காக இங்கே உள்ள ஒவ்வொரு ஆவியையும் நான் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறேன். பயபக்தியுடன் இருங்கள். 162 இப்போது, அம்மா, இதோ நாம் மீண்டும் இருக்கிறோம், வாழ்க்கையில் நாம் சந்தித்தது இதுவே முதல்முறை. அது அப்படியானால், உங்கள் கையை உயர்த்துங்கள். நாம் ஒருவேளை பல ஆண்டுகள் இடை வெளியில் பிறந்திருக்கலாம், மைல்கள் இடைவெளியில், உங்களை விட நான் வயது அதிகமானவன்; இது நாம் சந்திக்கும் முதல்முறை. ஆனால் கர்த்தராகிய தேவன், கர்த்தராகிய இயேசு கிணற்றடியில் ஒரு பெண்ணிடம் பேசி அவளுடைய பிரச்சனை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து, அவளுடைய பிரச்சனையை அவளிடம் சொன்னார் என்றால்... நீங்கள் எப்போதாவது அந்தக் கதையை வாசித்திருக்கிறீர்களா? அவளுக்கு... அவள் விபச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர் அதை அவளிடம் சொன்னபோது, அவள் அவரை அங்கீகரித்தாள், அவள் அவரைப் பெயல்செபூல் என்று அழைக்கவில்லை, அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றாள். அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். அவள் நகரத்திற்குள் ஓடிச்சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனிதரை வந்து பாருங்கள். இவர் மேசியா தானே?" என்றாள். 163 இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், அவர் அதே விதமாகச் செயல்பட வேண்டும், ஏனென்றால் அவர் ஏற்கனவே சுகமளித்துவிட்டார் என்று நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். இப்போது, அவர் இங்கே நின்றிருந்தால், நீங்கள் வியாதியாயிருந்தால் அது ஏற்கனவே சுகமாக்கப் பட்டாயிற்று, நீங்கள் வியாதியாய் இருக் கிறீர்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர்... நீங்கள் வியாதியாய் இருந்தால், அல்லது உங்களுக்குப் பணத்தேவை இருந்தால், அது ஒரு ஆவிக்குரிய தேவையாக இருந்தால், ஓ, எதுவாக இருந்தாலும், பிதா அவருக்கு முதலாவது காண்பிக்காவிட்டால் அவரால் எதையும் செய்ய முடியாது என்று அவர் சொன்னபடியால், பிதா அவருக்கு அதை வெளிப்படுத்தினால், தேவனுடைய குமாரனான அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்த முடியும். "பிதா எனக்குக் காண்பிக்கிற வரை நான் ஒன்றும் செய்வதில்லை" என்று அவர் சொன்னார். அவர் அதைச் செய்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? 164 சபையினரும் அதையே செய்வார்களா? கர்த்தர் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக. பயபக்தியுடன் இருங்கள். 165 நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் தாமதப்படுத்துகிறீர்கள்" என்று சொல்லலாம். 166 ஆம், ஐயா, நான் அதற்காகக் காத்திருக்கிறேன், என் அபிஷேகத்திற்காக. அது வரவில்லை என்றால், நான், சரி, கூட்டத்தைக் கலைத்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டியது தான், எனக்குத் தெரிந்ததெல்லாம் அதுதான். ஆனால் அது வந்தால், நல்லது. 167 இப்போது, சபையினரால் இன்னும் என் குரலைக் கேட்க முடியுமானால், அந்தப் பெண் என்னை விட்டு விலகிச் செல்வது போல் தெரிகிறது. ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவள் அறிந்தி ருக்கிறாள், ஏனென்றால் ஒரு மனிதனுக்கு முன்னால் நிற்பது அவளை அப்படி உணரச் செய்யாது என்று அவளுடைய ஆவிக்குத் தெரியும். நீங்கள் படத்தில் பார்க்கிற அந்த ஒளியின் தூதன் (Angel of Light) எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடுவே இருக்கிறார். அந்தப் பெண் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறாள், அவள் என்னை எதற்காக ஜெபிக்கச் சொல்ல விரும்புகிறாள் என்றால், ஒரு தீவிரமான நரம்புத் தளர்ச்சி நிலையினால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள், மேலும் உள்ளுக்குள் அவளுக்கு ஒரு கழலை (goiter) இருப்பதைப் போல இருக்கிறது, அதற்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அதுதான் உண்மை. அது சரியென்றால், அம்மா, உங்கள் கையை ஆட்டுங்கள். 168 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, அது எதுவாக இருந்தாலும், எனக்குத் தெரியாது; அது நாடாவில் பதிவாகியிருக்கிறது. அவளே அதற்குச் சாட்சியாக இருக்கட்டும். இப்போது, கடந்த நாட்களில், அவர்கள் முதல்முறையாகச் சந்தித்தபோது ஒரு பெண்ணின் பிரச்சனை எங்கிருக்கிறது என்று அறிந்த அதே கர்த்தராகிய இயேசு, இதோ இன்றிரவு தம்முடைய சபையின் மூலமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்," கொடிகள் கனிகளைத் தாங்குகின்றன. "இன்னும் கொஞ்சக்காலத்தில், உலகம் இனி என்னைக் காணாது," அதுதான் இந்தச் சபை யுகம், "ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள்," இறுதிக்காலச் சபை, "ஏனெனில் நான் உங்களுடனே, உங்களுக்குள்ளேயும் இருப்பேன்." 169 இப்போது நீங்கள், "நீங்கள் அதை ஊகித்துச் சொன்னீர்கள், சகோதரன் பிரான்ஹாம்," அது எதுவாக இருந்தாலும் என்று சொல்லலாம். 170 வெறும் வியாதியா, அல்லது ஏதோ, உபத்திரவமா? சரி. அது வெறும் உபத்திரவமா, அல்லது வியாதியா என்று நான் நாடா பதிவு செய்பவரிடம் கேட்டேன். நாம் அந்தப் பெண்ணிடம் பேசுவோம், அப்போதுதான் உங்களைவிட்டு எல்லா மூடநம்பிக்கைகளும் விலகும். அவளுக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கலாம், எனக்குத் தெரியாது. 171 அப்படி இருந்தால், அதைக் குறித்து நினைக்காதீர்கள், சும்மா... மேலே செல்லுங்கள், நீங்களாகவே இருங்கள், நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்று மட்டும் விசுவாசியுங்கள். 172 ஆம், அந்தப் பெண்ணுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கழலை இருக்கிறது, அவள் மிகவும் பதட்டமாகவும் இருக்கிறாள், அவள் எப்போதும் பொருட்களைக் கீழே போடுகிறாள். அவள் தன் இருதயத்தில் யாரோ ஒருவரை வைத்திருக்கிறாள், அது ஒரு வயதான பெண்மணி, அவளுடைய கண்களில் கண்புரை (cataracts) இருக்கிறது, அது அவளுடைய தாய். அதுதவிர, அவள் ஒரு குழந்துக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், அந்தக் குழந்தைக்கு ஒருவிதமான வலிப்பு நோய் (spells) இருக்கிறது, ஒருவிதமான மயக்கம், அது வலிப்பு (convulsions). அது கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால். அது உண்மைதானே, அம்மா? அது உண்மையானால் உங்கள் கையை ஆட்டுங்கள். இப்போது கிறிஸ்து உங்கள் வேண்டுதலுக்குப் பதிலளிக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிற வழியில் சென்று பெற்றுக்கொள்ளுங்கள், அது அப்படியே ஆகும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 173 "நீ விசுவாசிக்கக்கூடுமானால்!" அனைவரும் இப்போது பயபக்தியுடன் இருங்கள். என்ன நடக்கக்கூடும் என்று தெரியவில்லை. இங்கே என்ன இருக்கிறது என்பதைச் சபை உணருகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது, அது ஒரு அற்புதம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அது ஒரு அற்புதம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் இன்னும் அற்புதங்களைச் செய்கிறாரா? இப்போது, அது இரண்டு மூலங்களிலிருந்து மட்டுமே வர முடியும்: பிசாசு, அல்லது தேவன். ஒரு பிசாசு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையும், பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைப்பதையும் யாராவது எங்கே கேட்டிருக்கிறார்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். அது வேலை செய்வதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? அது அப்படிச் செய்வதில்லை. பரிசேயர்கள் அது பிசாசு என்று நினைத்தார்கள், பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்யும்போது அதற்கு விரோதமாகப் பேசுவது மன்னிக்க முடியாத பாவமாயிருக்கும் என்று இயேசு சொன்னார். அது எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே பயபக்தியுடன் இருங்கள். 174 நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில் லாதவர்கள், எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என்பதை நம்முடைய தேவனாகிய கர்த்தர் வெளிப் படுத்தினால், நான் அவருடைய ஊழியன் என்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்து இன்றிரவு உயிரோடிருக்கிறார் என்றும் நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய ஒரு இடத்திற்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், அது ஒரு வளர்ச்சி (growth). அது சரி. அந்த வளர்ச்சி எங்கே இருக்கிறது என்று தேவன் என்னிடம் சொன்னால், நான் அவருடைய தீர்க்கதரிசி என்று என்னை விசுவாசிப்பீர்களா? அது உங்கள் வலது பக்கத்தில் இருக்கிறது. அது சரி. போங்கள், இப்போது விசுவாசியுங்கள், நீங்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதில்லை. 175 ஐயா, நாம் அறிமுகமில்லாதவர்கள் என்று நினைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தில், இதுபோன்ற காரியங்கள் நடந்த பிறகு ஒருமுறை, பிலிப்பு என்றொரு மனிதன் போய் நாத்தான்வேலைக் கண்டுபிடித்து, நாத்தான்வேலைக் கூட்டத்திற்கு அழைத்து வந்தான். அங்கே இரண்டு மனிதர்கள் சந்தித்தார்கள், இயேசுவும் நாத்தான்வேலும், அவர்கள் சந்தித்தது அதுவே முதல்முறை, அவர், "நீ ஒரு நல்ல, நேர்மையான மனிதன்" என்றார். அவன் ஒரு மாயக்காரனாக இருந்திருக்கலாம், அவன் ஒரு முகமதியனாக இருந்திருக்கலாம், அவன்... அல்லது ஏதோ விக்கிரகத்தை வணங்குகிறவனாக இருந்திருக்கலாம், அவன் ஒரு இஸ்ரவேலன் என்று இயேசு அறிந்திருந்தார், அவன் வருவதற்கு முன்பு அவன் எங்கிருந்தான் என்று சொன்னார். 176 நாம் சந்திக்கும் முதல்முறை இது. இயேசு நிலைத்திருந்தால்... 177 மிகவும் பயபக்தியுடன் இருங்கள். தரிசனம் அந்த மனிதரை விட்டு விலகி, அந்த ஒளியில் வந்துகொண்டிருந்தது. இப்போது பயபக்தியுடன் இருங்கள், தயவுசெய்து நடமாட வேண்டாம், பாருங்கள், உங்களில் ஒவ்வொருவரும் ஒரு ஆவி, நாம் இப்போது இயற்கையான காரியங்களைக் கையாளவில்லை, ஆவிக்குரிய காரியங்களைக் கையாளுகிறோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆத்துமா இருக்கிறது, உங்களுக்கு ஒரு ஆவி இருக்கிறது, ஒரே ஒரு சிறிய அவிசுவாசம் இருந்தாலும், உங்களால் அதை உணர முடியும். ஒரே ஒரு சிறிய அசைவு. எல்லாம் தயாராக இருப்பது போல் தெரிகிறது. 178 "ஓ," நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், அது பைபிளில் எங்கே இருந்தது?" என்று கேட்கலாம். 179 இயேசு யவீருடைய மகளை உயிரோடு எழுப்பச் சென்றபோது, அவர்கள் அனைவரும் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள், அவர் அவர்கள் அனைவரையும் கட்டிடத்திற்கு வெளியே அனுப்பினார்; அவர் ஒரு மனிதனைக் கூட்டத்திற்கு வெளியே, நகரத்திற்கு வெளியே அழைத்துச் சென்று, அவனுக்குப் பார்வையை அளித்தார். 180 ஏதோ காரணத்திற்காக அது விலகிச் சென்றது, ஐயா, ஆனால் அவர் நல்லவர், அவர் திரும்புவார். நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நான் அவருடைய ஊழியன் என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? விசுவாசிப்பீர்களா? இதோ அது மீண்டும் வருகிறது. இப்போது ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். உங்கள் முதுகில் ஏதோ ஒன்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், அது ஒரு தண்டுவடப் பிரச்சனை (spinal condition), அது உங்களை மிகவும் நரம்புத் தளர்ச்சியடையச் செய்திருக்கிறது. நீங்கள் புரோஸ்டேட் (prostate) பிரச்சனையினால் இரவில் எழுகிறீர்கள், அது உங்களுக்கு... அதுதான் உங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு இருப்பிடம். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதுதவிர, நீங்கள் ஒரு பிரசங்கியார். அது சரி. நீங்கள் ஒருவருக்காக, ஒரு பேரனுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள், போலியோ நோய். அது தேவன் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் விசுவாசித்த வழியில் அதைக் கண்டுகொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 181 நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களா? 182 இந்தப் பகுதியிலிருந்து வருகிற... மிகவும் பயபக்தியுடன் இருங்கள், சந்தேகப் படாமல், எல்லாவற்றையும் விசுவாசியுங்கள். இதோ, ஒரு வயதான தம்பதியினர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அந்த அன்பான, வயதான அம்மா என்னைப் பார்க்கிறார்கள், அவர் பித்தப்பை (gallbladder) பிரச்சனையால் அவதிப்படுகிறார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது அவருடைய சிறிய கணவர், அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis) இருக்கிறது. அந்த மனிதர் ஒரு போர்வீரராக இருந்திருக்கிறார், ஏனென்றால் நான் அவரை யுத்தத்தில் பார்க்கிறேன், ஒரு சிறிய, வட்டமான தலைக்கவசத்தை அணிந்திருக்கிறார். வாயு தாக்கியதால்தான் (gas) உங்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டது, நீங்கள் முதல் உலகப் போரைச் சேர்ந்த ஒரு போர்வீரர், இது கர்த்தர் உரைக்கிறதாவது. 183 தேவனில் விசுவாசமாயிருங்கள். "நீ விசுவாசிக்கக்கூடுமானால்!" 184 அங்கே பின்னால் அமர்ந்திருக்கும் பித்தப்பை பிரச்சனை உள்ளவரே, சிறிய, பச்சை நிற சால்வை அணிந்திருக்கும் சகோதரியே, கர்த்தராகிய இயேசு உங்களையும் சுகமாக் குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பெண்ணிடம் நான் பித்தப்பை என்று சொன்னபோது உங்களுக்கு ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது, இல்லையா? உங்கள் இருவருக்கும் இடையே ஒரு கருமையான கோடு இருந்தது, இப்போது அது இருவரையும் விட்டு விலகிவிட்டது, உங்கள் விசுவாசம் உங்களைச் சுகமாக்கியது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 185 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும்... மக்களே, அழைக்கப்பட்ட நீங்கள் யாராக இருந்தாலும், எனக்கு உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றால், என் வாழ்நாளில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை என்றால், அங்கே உங்கள் கைகளை உயர்த்துங்கள். இதோ இருக்கிறீர்கள். அது என்ன? நான் அந்த மக்களைப் பார்த்ததே இல்லை. அது எதைப் பிரதிபலிக்கிறது? மரித்து உயிர்த்தெழுந்த, தமது சபையில் இருந்து அதே காரியத்தைச் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணின இயேசு, இதோ இங்கே இருக்கிறார். அவர்களுடைய விசுவாசம் அவர்களைச் சுகமாக்கியது. நீங்கள் விசுவாசம் கொண்டு நம்புங்கள். 186 ஜெபிக்கப்பட வேண்டிய பெண் நீங்கள்தானா? எனக்கு உங்களைத் தெரியாது, உங்களை அறிந்துகொள்ள எனக்கு எந்த வழியும் இல்லை. நாம் சந்திப்பது இதுவே முதல்முறை, ஆனால் தேவனுக்கு உங்கள் வாழ்க்கையும் உங்கள் இருதயமும் தெரியும். எனக்கு ஒன்றும் தெரியாது என்று உங்களுக்குத் தெரிந்த ஒன்றை அவர் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்களும் நானும் கணக்கு ஒப்புவிப்பதற்காக ஒருநாள் அவருடைய பிரசன்னத்தில் நிற்கப்போகிறோம் என்று அறிந்து, அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 187 வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கின்றன, மேற் கொள்வதற்குக் கடுமையாக முயற்சி செய்திருக்கிறீர்கள், உங்களுக்குப் பின்னால் கருமையான கோடு இருக்கிறது, ஆனால் இப்போது, அதற்காக நீங்கள் இங்கே நிற்கவில்லை, உங்கள் பாவங்களை நீங்கள் அறிக்கை செய்துவிட்டீர்கள், அவைகள் இரத்தத்திற்குள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒரு நண்பருக்காக இங்கே நிற்கிறீர்கள், அந்த நபர் மருத்துவமனையில் இருக்கிறார், இப்போதுதான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார், அவருக்கு ஏதோ ஒருவிதமான தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது, அது ஆஸ்துமா சம்பந்தப்பட்ட நிலை (asthmatic condition), அது கிட்டத்தட்ட அவர் உயிரைப் பறித்துவிடும் நிலையில் இருந்தது, அவருக்காக நீங்கள் ஜெபிக்க விரும்புகிறீர்கள். அவர் சுகமாவார் என்று விசுவாசிக்கிறீர்களா? போங்கள், அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பயபக்தியுடன் இருங்கள். 188 வணக்கம், ஐயா? கர்த்தராகிய தேவனுக்கு நம் இருவரையும் தெரியும். நீங்கள் என்னை விட வயது அதிகமானவர். நாம் சந்திப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். கிறிஸ்து எனக்கு உதவும் உதவியினால் உங்களுக்கு உதவ என்னால் ஏதோ ஒன்றைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றால், உங்கள் வயதிலுள்ள ஒருவருக்கு முன்பாக இங்கே நிற்பதற்கு நான் அவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா, ஐயா? என் வயதான அப்பா உயிரோடு இருந்திருந்தால், அவர் உங்கள் வயதில் இருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவரைப் பார்க்க இன்றிரவு நான் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன், அவர் திரைக்கப்பால் சென்று விட்டார். ஒருநாள் நீங்களும் போவீர்கள், நானும் போவேன். உங்களுக்கு உதவுவதற்கு தேவன் எனக்குக் கொடுக்கும் திறமையைக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்ய மட்டுமே நான் செய்வேன். 189 தேவன் எனக்கு வெளிப்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒன்றை, அல்லது எனக்கு ஒன்றும் தெரியாது என்று உங்களுக்குத் தெரிந்த நீங்கள் இங்கே வந்திருப்பதற்கான காரணத்தைச் சொன்னால், உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் உணருவீர்களா? நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்று அவருக்குத் தெரிந்தால், நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதையும் அவர் நிச்சயமாக அறிவார். "ஓ, நீங்கள் இப்படி, அப்படி, அல்லது வேறொன்றாக இருக்கப் போகிறீர்கள்" என்று நான் சொன்னால், அதைச் சந்தேகிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் என்ன இருந்தது என்று அவர் சொன்னால், என்ன இருந்தது என்று அவருக்குத் தெரிந்தால், என்ன இருக்கும் என்பதையும் அவர் நிச்சயமாக அறிவார். 190 உங்களுக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய முயற்சிப்பதை நான் பார்க்கிறேன், உங்கள் கையை முழங்கால் மேல் வைத்துக்கொண்டு குனிகிறீர்கள், உங்களுக்குக் கீல்வாதம் (arthritis) இருக்கிறது, மிகச் சரியே, இருதயக் கோளாறு மற்றும் கீல்வாதம். நான் அவருடைய தீர்க்கதரிசி, அல்லது அவருடைய ஊழியன் என்று என்னை விசுவாசிக்கிறீர்களா, ஐயா? உங்கள் இருதயத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள். உங்களுடன் இங்கே இருக்கிற உங்கள் மனைவியையும் கர்த்தராகிய தேவன் சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அவருக்குத் தீவிரமான முதுகுப் பிரச்சனை இருக்கிறது. அது சரி. அது உண்மை. திரு. பார்க்கர், தேவன் உங்களைச் சுகமாக்கி உங்கள் மனைவியையும் சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அப்ப டியே பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் துதிக்கப்படுவாராக. "நீ விசுவாசிக்கக்கூடுமானால்!" 191 நான் உங்களிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல், நீங்கள் நாற்காலியில் அமர்ந் திருக்கும் போதே நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்று சொன்னால் என்ன செய்வது? அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் முழு... விசுவாசிக்கிறீர்களா? உங்கள் வழியில் செல்லுங்கள், ஏனென்றால் நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள். 192 நீங்கள் உங்கள் இரவு உணவைச் சாப்பிடலாம், உங்கள் வயிற்றுப் பிரச்சனை போய்விட்டது என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? போங்கள், சாப்பிடுங்கள். 193 தேவன் சர்க்கரை நோயைச் (diabetes) சுகமாக்கி உங்களை நலமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? "ஆண்டவரே உமக்கு நன்றி, என்னைச் சுகமாக்கும்" என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். தேவனில் விசுவாசமாயிருங்கள். 194 நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் பிரச்சனையும் இருக்கிறது. தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் வழியில் செல்லுங்கள், மகிழ்ச்சியோடு, "ஆண்டவரே உமக்கு நன்றி" என்று சொல்லுங்கள். 195 வாருங்கள், ஐயா. இருதயக் கோளாறு மற்றும் சிறிது கீல்வாதத்தால் அவதிப் படுகிறீர்கள். தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? தொடர்ந்து நடந்து செல்லுங்கள். 196 தேவன் உங்களுக்காக அந்தச் சர்க்கரை நோயைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால் அப்படியே எழுந்து, தொடர்ந்து செல்லுங்கள், தொடர்ந்து நகருங்கள், விசுவாசியுங்கள். 197 இங்கே பாருங்கள், இளம் பெண்ணே, தேவன் உங்களுக்காக அந்தப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையைச் (female trouble) சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? தொடர்ந்து செல்லுங்கள். 198 இருதயக் கோளாறு மற்றும் நரம்புத் தளர்ச்சி, விசுவாசித்துக்கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். 199 ஆஸ்துமா நிலைமை, தேவனை விசுவாசித்துக் கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். 200 வாருங்கள், ஐயா. சர்க்கரை நோய் கர்த்தராகிய தேவனுக்கு ஒன்றுமில்லை, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக்கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். 201 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அம்மா? தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் தேவனுடைய ஊழியன் என்று என்னை விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது, இல்லையா? 202 இப்போது, தயவுசெய்து ஒரு நிமிடம் இருங்கள். சபையில் ஏதோ ஒன்று சம்பவித்தது. அந்த மனிதர், இப்போது மேடையில் இருந்தது நீங்களா, ஐயா? ஒரு ஒளி சூழ்ந்திருக்... இல்லை, அவருக்குப் பின்னால் அந்த மூலையில் இருக்கிற பெண்மணிதான், உள்ளுறுப்புப் பிரச்சனைகளால் (internal troubles) அவதிப்படுகிறார். தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா, அம்மா? உங்கள் கால்களில் எழுந்து நின்று கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது போய் விட்டது, முடிந்துவிட்டது. 203 உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்மணி, அவர் கீல்வாதத்தால் (arthritis) பாதிக்கப் பட்டிருக்கிறார். இப்போதுதான் சுகமடைந்த பெண்ணே, உங்கள் கையை அவர்மேல் வைப்பீர்களா? இப்போது விசுவாசியுங்கள், அம்மா. ஆசீர்வாதம் அந்தப் பெண்மேல் இருக்கும்போதே, நீங்கள் சுகமடைவீர்கள், அவர் அதை உங்களுக்குக் கடத்துவார். 204 "நீ விசுவாசிக்கக்கூடுமானால், எல்லாம் கூடும்." அதை விசுவாசிக்கிறீர்களா? 205 அங்கே வாயில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இளம் பெண்ணே, உங்களைப் பற்றி என்ன? தேவன் உங்களுக்காக அந்தக் கழலையைச் (goiter) சுகமாக்கி, உங்களை நலமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கையை உயர்த்துங்கள். உங்கள் விசுவாசத்திற்கு நான் சவால் விடுகிறேன்! 206 உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண்மணி, அவருக்குப் புண்களும் (ulcers), கால் பிரச்சனையும், இருதயக் கோளாறும் இருக்கிறது. அது சரி, அம்மா. தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். ஜெபியுங்கள். உங்களில் சிலர் அவரைத் தொடுங்கள். 207 இதோ ஒரு சிறிய, வயதான பெண்மணி, தன் தொப்பியில் இந்தப் பூக்களை வைத்துக்கொண்டு, கையைத் தாழ்த்தி, ஜெபித்துக்கொண்டிருக்கிறார். அவர் எதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார் என்று தேவன் என்னிடம் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அன்பான தோற்றமுடைய, சிறிய, வயதான தாய், அவர் ஒரு பையனுக்காக, போலியோ நோயுள்ள பேரனுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார். அது சரிதானே, அம்மா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்கள் என்று தேவன் என்னிடம் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் தேவன்! 208 இந்தப் பெண்ணா? இவரா...? உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், என்னை விசுவாசிப் பீர்களா? நன்றி. உங்கள் உடல் முழுவதும் சிறிய கட்டிகள் (cysts) இருக்கின்றன. அது சரி. ஆம். நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளும்படி அவர் உங்களுக்குச் சொல்வார், இங்கிருந்து புறப்பட வேண்டிய ஒருவர் உங்களுடன் இருக்கிறார், உறவினர், அவருக்கு நெஞ்சு வலி இருக்கிறது. அது முடிந்துவிட்டது என்று அவரிடம் சொல்லுங்கள். அவர் எப்படியும் வீட்டிற்குச் செல்லலாம். அம்மா, நீங்கள் நியூ பிரன்சுவிக்கைச் (New Brunswick) சேர்ந்த ஒரு கனடியப் பெண்மணி. அது சரி. அது சரி. சொல்லப்போனால், நீங்கள் திருமதி. ஆஷ்ஃபீல்ட் (Ms. Ashfield). உங்கள் வழியில் சென்று மகிழ்ச்சியாயிருங்கள். 209 உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கால்களில் எழுந்து நின்று அவருக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நேரத்திலே சுகமடையலாம். உங்கள் கைகளை உயர்த்தி, "நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன்" என்று பாடுங்கள். கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவரே... [ஒலி நாடாவில் காலியிடம். சபையார நான் அவரைத் துதிப்பேன் என்று பாடுகிறார்கள்] ~ 127 ~